Back to Top

Dell வழங்கும் எடுப்பும், அழகிய வடிவமைப்பும் கொண்ட XPS மற்றும் Inspiron  உற்பத்தி வரிசை

Dell வழங்கும் எடுப்பும், அழகிய வடிவமைப்பும் கொண்ட XPS மற்றும் Inspiron உற்பத்தி வரிசை

November 28, 2019  10:35 am

Bookmark and Share
வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வலுவான செயல்திறன், அழகிய வடிவமைப்பு மற்றும் தமது வாழ்க்கைமுறைக்கேற்ற வகையில் தனிப்பட்ட பாவனைக் கணினிகளை (PC) விரும்புகின்றனர் என்பதை Dell தெளிவாக செவிமடுத்து அறிந்து. கொண்டுள்ளது. இன்று தனது புதிய உற்பத்திகளை தலைநகர் கொழும்பில் Dell அறிமுகப்படுத்தியுள்ளது. அனுபவம் மற்றும் வடிவமைப்பு ஆகிய இரு அம்சங்களிலும் இணக்கமான சமநிலையை இப்புதிய சாதனங்கள் வெளிக்காண்பிப்பதுடன், னுநடட இன் புத்தாக்கத்தை முற்றிலும் புதியமொரு மட்டத்திற்கு எடுத்துச் சென்று, அதன் பாராட்டுப்பெற்ற உயர் ரக XPS உற்பத்தி வரிசை, மற்றும் அதன் பிரதான வர்த்தகநாமமான Inspiron முழுவதும் கட்டமைக்கப்பட்டு, தங்குதடையின்றிய தொழிற்பாட்டிற்கு துல்லியமான தொழில்நுட்ப விபரங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

மொபைல் கணினி அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் தனது அதிநவீன கணினி புத்தாக்கங்களை Dell இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. தீவிரமான, அதிக திறன் முயற்சி தேவைப்படுகின்ற, பல் அடுக்கு பணிச்சுமைகளுக்கான கணினிக்கு தேவைப்படுகின்ற செயல்திறனை வழங்கும் அதேசமயம் 4K உள்ளடக்கத்தை திறன்மிக்க வழியில் கையாளுகின்ற தற்போதைய XPS மற்றும் Inspiron உற்பத்தி வரிசைக்கு புதிய 10th Gen Intel® Core™ processors வலுவூட்டலுடனான புத்தம்புதிய காரணிகளை தனது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் தற்போது விஸ்தரித்துள்ளது. இவ்வாறு தொழிற்படுவதன் மூலமாக இரு சிறப்பம்சங்களிலும் மெல்லிய, குறைந்த எடை கொண்ட, மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய வடிவமைப்புக்களை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.

´மெல்லிய மற்றும் குறைந்த எடை கொண்ட சாதனங்களை நாடும் போக்கு தொழிற்துறையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் நிலையில், முண்டியடித்துக் கொண்டு வெறுமனே மிகச் சிறிய வடிவிலான சாதனத்தை வழங்குவதுடன் பாவனையாளர்களை திருப்திப்படுத்தி விட முடியாது என்பதை நாம் அறிவோம். தகவமைமைப்புக் கொண்ட, எப்போதும் இணைக்கப்பட்ட, உயர் செயல்திறன் கொண்ட மற்றும் குறைபாடற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட பாவனைக் கணினியையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்,´ என்று Dell Technologies இன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளரான கிறிஷான் பெர்னாண்டோ அவர்கள் குறிப்பிட்டார். “Intel இன் புதிய 10th Gen processors மூலமாக தற்போது இலங்கையிலுள்ள விசுவாசம்மிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு தீவிரமான, அதிக திறன் முயற்சி தேவைப்படுகின்ற, பல் அடுக்கு பணிச்சுமைகளுக்கான எடுப்பான மற்றும் அழகிய வடிவமைப்பு கொண்ட தனிப்பட்ட பாவனைக் கணினிகளை தற்போது எம்மால் வழங்க முடிகின்றது,´ என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

10th Generation Inspiron மடிகணினி உற்பத்தியின் அறிமுகம் தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்த்தன அவர்கள் கருத்து வெளியிடுகையில் ´இலங்கையிலுள்ள எமது அபிமானத்திற்குரிய வாடிக்கையாளர்களுக்கு புதுமையான உற்பத்தி வரிசையான Inspiron 10th Generation மடிகணினிகளை அறிமுகப்படுத்துவது எமக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கின்றது. இதன் மூலமாக தொழில்நுட்பவியல் அனுபவம் செயல்திறன் மிக்கதாக மாறவுள்ளதுடன், மிகுந்த சௌகரியம் அளிக்கவுள்ளது. சிங்கர் மற்றும் Dell ஆகியன ஒன்றிணைந்து இத்தகைய மேலும் பல புத்தாக்கங்களை எமது வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இவ்வேளையில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்,´ என்று குறிப்பிட்டார்.

புதியXPS 13 2-in-1 - 2.5 மடங்குகள் வரை கூடுதல் செயல்திறனுடன் நவீன, மெல்லிய வடிவமைப்பு

மிகச் சிறந்த வகுப்பு தொழில்நுட்பங்கள், அதிசிறந்த கட்டமைப்பு மற்றும் மூலப்பொருட்கள், வலு மற்றும் அழகுநயத்தின் கலப்பு ஆற்றல் காரணமாக மிகவும் பாராட்டுப் பெற்ற Dell இன் சாதன உற்பத்தி வரிசையாக XPS காணப்படுகின்றது. புதிய new XPS13 2-in-1 ஊடாக தனது அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை Dell மேலும் ஒரு படி மேற்கொண்டு சென்றுள்ளது. Intel இன் புதிய 10th Gen CoreTM, 10-nanometer silicon processors களுடன் கிடைக்கப்பெறுகின்ற உலகின் முதலாவது Project Athena உறுதிப்படுத்தல் கொண்ட மடிகணினியாக இது திகழ்ந்து வருகின்றது.

இப்புதிய 2-in-1 சாதனத்தின் முகத்திரை அனுபவம், அனைத்து முனைகளிலும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் Infinity Edge display 7% பெரிதாகவும், 16:10 வடிவம் கொண்டதாகவும் மற்றும் Dolby Visioni கொண்டதாகவும் காணப்படுகின்றது. மேலும், விருப்பத்திற்குரிய புதிய UHD+ display மேம்பட்ட வர்ணத் துல்லியத்தையும், பிரிதிறனையும் வழங்கி, துல்லியமான விபரங்களைக் கொண்ட படங்களை வசப்படுத்திக் கொள்வதுடன், HDR400 சான்று அங்கீகாரம் பெற்ற UHD+ panel உடன் HDR உள்ளடக்கதை அனுபவித்து மகிழும் ஆற்றலையும் கொண்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற மிகுந்த வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்சாய்வுப் பகுதியில் இது வரை வெளிவந்துள்ள Dell இன் மிகச் சிறந்த மடிகணினி கேமரா (2.55மிமீ) ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Intel இன் 10th Gen Intel Core processors களைக் கொண்ட Dell இன் முதலாவது மடிகணினியாக XPS 13 2-in-1 காணப்படுவதுடன், பணிச்சுமையின் செயல்திறனுக்கு அமைவாக CPU வின் வலுவை முற்கூட்டியே எதிர்வுகூறி அதனை மாற்றியமைக்கின்ற அதிநவீன Intel Dynamic Tuning Technology தொழில்நுட்பத்தில் தகவமைப்பு செயல்திறன் அடிப்படை சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இதற்கு முன்னைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் 2-in-1 ஆனது ஒட்டுமொத்தமாக 8% மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், உயர் செயல்திறன் கொண்ட processor ஐ குளிர்விப்பதற்கு வெப்ப வடிவமைப்பையும் Dell மீள்கட்டமைப்புச் செய்துள்ளது.

Intel WiFi 6 Chipset இல் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ள அதன் புதிய KillerTM AX1650 (2x2) முன்னைய தலைமுறையை விடவும் மூன்று மடங்கு வேகத்துடன் கம்பியில்லா இணைப்புத்திறனை வழங்குகின்றது. பாவனையாளர்கள் வேகமான மற்றும் சீரான இணைய அனுபவங்களைப் பெற்று மகிழ இடமளிக்கும் வகையில் Killer 1650 ஆனது தன்னியக்க அடிப்படையில் கண்டறிந்து, வகைப்படுத்தி, வீடியோ, தொடர்பாடல் மற்றும் விளையாட்டு நெரிசலை streaming செய்வதற்கு முதலிடம் அளிக்கின்றது. சாதனங்களால் வழிநடாத்திச் செல்லப்படுகின்ற இன்றைய உலகில், மக்கள் மணிக்கணக்கில் சாதனங்களில் மூழ்கிப் போய் கிடப்பதுடன், தினசரி உயர் மட்டத்தில் நீல ஒளியை (blue light) உள்ளெடுக்கின்றனர். மனிதனுக்கு தீங்கினை ஏற்படுத்த வாய்ப்புள்ள நீல ஒளி வெளியீட்டு விளைவுகளைக் குறைக்க உதவுவதற்கும், வர்ண வரிசை செயல்திறனை பேணுவதற்கும், தீங்கு விளைவிக்கும் நீல ஒளியைத் தேர்ந்தெடுத்து குறைத்து, ஒளி அலைக்கற்றையை அனைத்து இடங்களுக்கும் பரப்புகின்ற வகையில் XPS 13 2-in-1 இற்கு Eyesafe® display க்களை Dell இணைத்துள்ளது.

COMPUTEX d&i விருதின் வெற்றியாளரான இப்புதிய 2-in-1 ஆனது நிபுணத்துவத்துடனான வடிவமைப்புக்கலை மற்றும் உயர் ரக மூலப்பொருட்களுடன் விபரங்களுக்கு கவனமாக இடமளிக்கும் Dell இன் அர்ப்பணிப்பிற்கு இது சான்றுபகருகின்றது. இப்புதிய வடிவமைப்பானது நீடித்த உழைப்பு மற்றும் அழகு ஆகியவற்றுக்காக diamond cut sidewalls உடன் CNC machined aluminum, black carbon fiber palm rest மற்றும் Gorilla Glass 6 ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தலைசிறந்த பாவனையாளர் அனுபவம் மற்றும் அழகிய வடிவமைப்பு ஆகிய இரண்டின் கலவையுடன், குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைப்பு அளவில் பாரிய touchpad, edge-to-edge MagLev keyboard மற்றும் புதுமையாக, கச்சிதமாகச் செதுக்கப்பட்ட hinge design ஆகிய அத்தியாவசியங்களையும் Dell மேம்படுத்தியுள்ளது.

புதிய Inspiron மடிகணினிகள் - ஒவ்வொரு பாவனையாளருக்கும் ஏற்ற வகையில் வலு மற்றும் நவீன பாணி

புத்தம் புதிய மற்றும் சமகால வடிவமைப்புக்கள், சிறப்பம்சங்கள் மற்றும் ஒப்பீட்டுரீதியாக சிறந்த விலைகளில் கிடைக்கும் புதிய மற்றும் பன்முக ஆற்றல் கொண்ட Inspiron மடிகணினிகள் மற்றும் 2-in-1சாதனங்களையும் Dell அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிநவீன 10th Gen Intel® Core™ processors களுடன் புதிய Inspiron 13 7391 2-in-1 மடிகணினி அடங்கலாக, Dell இன் புதிய Inspiron உற்பத்தி வரிசையில் பல் அடுக்கு பணிச்சுமைகளுக்காக அதிக செயல்திறனை Dell வழங்குகின்றது. முதற்தடவையாக CES 2019 நிகழ்வில் (introduced at CES 2019) அறிமுகப்படுத்தப்பட்டதுடன், Computex Design Innovation விருதின் வெற்றியாளரான இப்புதிய Inspiron 13 7000 2-in-1 வடிவத்தில், எந்த வகையான 2-in-1 சாதனமாக இருப்பினும், Dell Active Penfor இனை அடையப்பெறுவதை சாமர்த்தியமாக மேற்கொள்வதற்கு தனது மேற்சாய்வில் magnetic pen garage இனையும் Inspiron 13 7000 2-in-1 கொண்டுள்ளது. 3 - பக்க ஒடுக்கமான ஓரத்துடன் 4k UHD தொடுகைத்திரை, மேற்சாய்வுகளில் மறைந்துள்ள துவாரங்களினூடாக சூடான வளியை வெளியேற்றும் வகையில் மீள்வடிவமைக்கப்பட்ட வெப்ப வெளிப்பாய்ச்சல், கவர்ச்சி ஈர்ப்பினைக் கொடுக்கும் வகையில் hinge design ஓரங்களுடனான முழுமையான அலுமினிய உடல் மேற்பாகம் அடங்கலாக hinge design 7000 உற்பத்தி வரிசையில் எதிர்பார்க்கப்படுகின்ற தாராளமான உயர் ரக சிறப்பம்சங்களுடன் இது வெளிவந்துள்ளது.

தகவமைப்புக் கொண்ட அதன் புதிய வெப்ப வடிவமைப்பானது எந்த சூழ்நிலையிலும் அதியுச்ச கணினி அனுபவத்தை வழங்குவதற்காக 2-in-1 இயங்கு நிலையில் உள்ளதா அல்லது தற்போது இயக்கம் இன்றிய நிலையில் உள்ளதா என்பதை தானாகவே விளங்கி அதற்கு எற்றவாறு வளிச்சுற்றோட்டத்தை சீராக்கம் செய்வதற்கு நவீன வழிமுறைகள் மற்றும் முடுக்கமானிகளை உபயோகிக்கின்றது. உட்கட்டமைக்கப்பட்ட fingerprint reader உடன் ஒருங்கிணைக்கப்பட்ட power key> ExpressChargeTM இற்கு உதவுகின்ற பாரிய கொள்ளளவு ஆற்றல் கொண்ட மின்கலங்கள், முழுமையான அளவு கொண்ட HDMI port, Micro SD card reader ஒன்று ThunderboltTM 3 இற்கு உதவும் USB Type-CTM port, மற்றும் USB 3.1 Gen 1 port போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தையும் வெறுமனே 1.39கிலோ எடை கொண்ட அழகிய, கச்சிதமான வடிவமைப்பாக இச்சாதனத்தை சௌகரியமான வடிவமைப்பில் பாவனையாளர்கள் எதிர்பார்க்க முடியும்.

மேலும், Dell Inspiron 5000 உற்பத்தி வரிசை கட்டமைப்பானது பின்வருவன அடங்கலாக, புதிய 10th Gen Intel® Core™ processor களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது:

• Inspiron 15 3000 (3593) ஆனது தெரிவிற்கேற்றவாறு எங்கிருந்தும் பணி இலக்குகளை முன்னெடுப்பதற்கு நவீன பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள NVIDIA® GeForce® MX230 தனித்துவமான கிராபிக்ஸ் அட்டையை (graphics card) கொண்டுள்ளது.
• Inspiron 13 5000(5391) ஆனது Platinum Silver மற்றும் Iced Lilac ஆகிய இரண்டு நேர்த்தியான வர்ணத் தெரிவுகளுடன் இலகுவில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• Inspiron 145000 (5490) ஆனது நம்பகத்தன்மை மற்றும் பன்முக இலக்குகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன், Platinum Silver, Iced Lilac, Iced Mint, மற்றும் Iced Gold (14” மட்டும்) நவீன பாணியிலான வர்ணத் தெரிவுகளில் கிடைக்கின்றது
• Inspiron 147000 (7490) கணினியின் இயக்கம் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமயங்களிலும் பாவனையாளர்கள் வேகமாக தமது கோப்புக்கள் மற்றும் applications களை அடைந்து கொள்ள இடமளிக்கும் வகையில் கணினியின் இயக்கத்தை ஆரம்பிக்கும் புதிய lid-open sensor தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது Platinum Silver வர்ணத்தில் கிடைக்கப்பெறுகின்றது.
• Inspiron 1570002-in-1 (7590 2-in-1), முதலில் CES 2019 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், Computex Design Innovation விருதையும் வென்றுள்ளது. ThunderboltTM 3 ஆதரவுடன் USB Type- CTM சேர்க்கையுடன் தற்போது கிடைக்கப்பெறுவதுடன், விருப்பத்திற்கேற்றவாறு silver chassis அடிச்சட்டத்தையும் கொண்டுள்ளது.

கிடைக்கப் பெறுதல்
இவை அனைத்தும் 2 வருட பாவனைக்கால உத்தரவாதத்துடன் வெளிவந்துள்ளதுடன், விசேடமாக குறிப்பிடப்பட்டாலன்றி, னுநடட இன் அங்கீகாரம் பெற்ற மீள்விற்பனையாளர்களிடம் ஏற்கனவே கிடைக்கப்பெறுகின்றது.
• Dell Inspiron 15 5000 (5593) இன் விலை ரூபா 92,699 முதற்கொண்டு
• Dell Inspiron 14 5000 (5491) இன் விலை ரூபா 170,999 முதற்கொண்டு
• Dell Inspiron 14 5000 (5490) இன் விலை ரூபா 149,999 முதற்கொண்டு
• Dell Inspiron 13 7000 (7391) இன் விலை ரூபா 214,999 முதற்கொண்டு
• XPS 13 (7390) இன் விலை ரூபா 259,999 முதற்கொண்டு


மேலதிக தகவல் விபரங்களுக்கு
´• Twitter, Facebook, YouTube மற்றும் LinkedIn ஊடாக னுநடட இனைத் தொடர்பு கொள்ள முடியும்.

Dell Technologies தொடர்பான விபரங்கள்
Dell Technologies (NYSE:DELL) ஆனது நிறுவனங்களும், தனிநபர்களும் தமது டிஜிட்டல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பி, தாங்கள் பணியாற்றுகின்ற, வாழ்கின்ற மற்றும் விளையாடி மகிழ்கின்ற பாணியை முற்றிலும் மாற்றியமைப்பதற்கு உதவுகின்ற வர்த்தகங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நிறுவன குடும்பமாகும். Edge, core மற்றும் cloud என தொழிற்துறையில் மிகவும் விரிவான மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகின்றது.

Most Viewed