Back to Top

Samsung அறிமுகப்படுத்தும் Galaxy A70s இலங்கையின் முதலாவது 64MP மூன்று கமராக்களையும் மிகப்பெரிய Infinity-U Display இனையும் கொண்டுள்ளது

Samsung அறிமுகப்படுத்தும் Galaxy A70s இலங்கையின் முதலாவது 64MP மூன்று கமராக்களையும் மிகப்பெரிய Infinity-U Display இனையும் கொண்டுள்ளது

November 28, 2019  11:17 am

Bookmark and Share
Samsung Galaxy A70s இலங்கையில் முதலாவது 64MP மூன்று கமராக்களையும் மிகப்பெரிய Infinity-U Display மற்றும் 32MP முன்பக்க கமராவினையும் கொண்டுள்ள ஸ்மார்ட் ஃபோன் ஆகும். இதை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற Singer Life Style Fiesta நிகழ்வின் போது Samsung அறிமுகப்படுத்தி வைத்தது.

Galaxy A series இன் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களில் புகழ்பெற்ற புயடயஒல யு ளநசநைள இன் புதிய வெளியீடாகும். வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான தருணங்களை படம் பிடித்திட, இணைந்திருந்திட மற்றும் அதைப் பகிர்ந்திட டிஜிட்டல் பூர்வீக வாசிகளுக்கு எல்லையற்ற இணைப்பினை வழங்கிடும் வகையில் அழகிய வடிவமைப்பில் சக்தி வாய்ந்த பட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் மிகச்சிறந்தது என்ற வகையில் 64 MP முதன்மைக் கமராவுடன் Night Mode மற்றும் Super Steady Video மற்றும் செல்ஃபி எடுக்கக்கூடிய 32MP முன் பக்க கமரா போன்றவற்றை உள்ளடக்கி Galaxy A70s ஆனது ஸ்மார்ட் ஃபோன் போடோகிராபி மற்றும் வீடியோகிராபி ஆகிய படம் எடுக்கும் எல்லைகளை இளைஞர்களுக்காக மேலும் விஸ்தரிகிறது.

இவ்வறிமுகப்படுத்தலைப் பற்றி Samsung Sri Lanka வின் முகாமைத்துவ பணிப்பாளரான திரு. கெவின் சங்சு யூ கருத்து தெரிவிக்கையில், புத்தாக்கத்தில் Samsung முன்னிலை வகிப்பதுடன், இதன் Galaxy A70s ஆனது அவ்வாறான இன்னுமொரு புத்தாக்கம் மிக்கதோர் வெளியீடாகும். இதற்கு முக்கிய காரணம், 64MP மூன்று கமராக்களைக் கொண்டதும் மிகப்பெரிய Infinity-U Display இனைக் கொண்டதுமான இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் ஃபோன் என்பது அகும். இது இலங்கையின் இளைய சமுதாயத்தினரின் ஸ்மாhட் ஃபோன் அனுபவத்தினை மேலும் மேம்படுத்திடும் என்பதில் ஐயமில்லை.´ எனக் குறிப்பிட்டார்.

தனித்துவமான சக்திவாய்ந்த கமரா
படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டோரின் தேவையை மனதில் நிலைநிறுத்தி புதிய Galaxy A70s ஆனது 32MP முன் பக்க கமராவுடன் கவர்ச்சிகரான மூன்று பின்பக்க 64MP கமராக்களையும் கொண்டுள்ளது. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப அவர்கள் படங்கள் எடுத்திட விரும்பும் நேரம் இரவோ பகலோ எதுவாக இருந்தாலும், Galaxy A70s ஆனது அதற்கான தீர்வை வழ்கிடும் வகையில் Night Mode அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது மிகவும் குறைந்தளவு வெளிச்சத்திலும் துல்லியமான படங்களை எடுத்திட உதவுகிறது. இதற்கு மேலதிகமாக Super Steady அம்சத்தின் மூலம் பயனாளிக்கு சுமுகமான வீடியோக்களையும் மிக வேகமான செயற்பாடுகளையும் Galaxy A70s உடன் மிகவும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியும். அத்தோடு பயனாளிகளுக்கு சிறந்த வீடியோக்களை எடுப்பதற்கு திறன் வாயந்த 4K Ultra HD வசதியையும் இது கொண்டுள்ளது.

கண்கவர் பார்வை அனுபவம்
இது அழகிய 6.7” FHD+ sAMOLED Infinity-U Display இனைக் கொண்டுள்ளதால் விளிம்பு வரையான ஓர் நிறைவான காட்சியினை வழங்குகிறது. அதனால் கேமிங், வீடியோக்களை பார்த்திட, பல பணிகளை ஒரே நேரத்தில் செய்திட மற்றும் பிரவுசிங் செய்வதற்கும் ஆழமான கண்கவர் காட்சி அனுபவத்தினை வழங்குகிறது. ளுயஅளரபெ இற்கே உரித்துடைய Super AMOLED தொழில்நுட்பத்தினை இது கொண்டுள்ளதால் ஓர் உயிரோட்டமுடைய ஸ்கிறீன் இனை புதிய A series இல் முதன் முறையாகக் கொண்டுள்ளது. இது மிகவும் தெளிவானதும் துல்லியமானதுமான வீடியோக்களை ஸ்டிரீமிங் செய்ய அனுமதிக்கிறது.

சக்தி வாய்ந்த செயற்திறன்.
வேகமான வாழ்க்கையினை கொண்ட இளைஞர்களின் தேவைக்கேபற்ப Galaxy A70s ஆனது Octa-core Qualcomm Snapdragon 675 processor இனை உள்ளடக்கியுள்ளது. இது தேவையான பணிகளை மிகவும் எளிதாக கையாள உதவுகிறது. 6GB RAM உடன் இணைக்கப்பட்ட Galaxy A70s சுமுகமான மற்றும் எல்லையற்ற பல்பணி அனுபவத்தினையும் வழங்குகிறது. AI-powered gaming booster இனைக் கொண்டுள்ளதால் Galaxy A70s கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு மிகவும் உகந்தது ஆகும். இது AP செயற்திறனினால் கைவிடப்படும் படங்களை ஈடுசெய்ய விளிம்புகளுக்கிடையில் மெய்நிகர் படங்களை சேர்க்கிறது.

Galaxy A70s மிக விரைவில் Damro, Singer, Singhagiri, Softlogic ஆகிய விற்பனை நிலையங்களிலும் நாடு முழுதும் உள்ள அனுமதி பெற்ற Softlogic Mobile விநியோக முகவர்களிடமும் மற்றும் John Keells Office Automation இலும் பெற்றுக் கொள்ள முடியும். அந்நிலையத்தின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வர்த்தக குறி இடப்பட்ட பலகையொன்றின் மூலம் அந்நிலையத்தினை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு Prism Crush White மற்றும் Prism Crush Black ஆகிய நிறங்களில் கிடைக்கும் இச்சாதனத்தினை முன்னணி ஒன்லைன் தளங்;கள் மூலமும் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய Galaxy A70s சாதனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக உதவிகள் தேவைப்படுமிடத்து வாடிக்கையாளர் உடனடி அழைப்பு நிலையத்துக்கு நீட்டிக்கப்பட்ட சேவை நேரங்களான திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை தொடர்பு கொள்ள முடியும்.

Most Viewed