Back to Top

அரச துறை ஊழியர்களுக்கு உபஹார சலுகைத் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40% விலைக் கழிவினை அனுபவித்திட முடியும்

அரச துறை ஊழியர்களுக்கு உபஹார சலுகைத் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40% விலைக் கழிவினை அனுபவித்திட முடியும்

November 28, 2019  04:22 pm

Bookmark and Share
மொபிடெல் தமது உபஹார திட்டத்தின் கீழ் அரச துறை ஊழியர்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தெரிவு செய்யப்பட்ட Samsung மற்றும் Huawei ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40% மான ஒப்பற்ற விலைக் கழிவினை தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற அரச பிரிவின் ஊழியர்களுக்கு வழங்குவதன் மூலம் தமது புத்தாக்கம்மிக்க சேவையை வழங்குகிறது.

Samsung இன் புத்தம் புதிய 4G ஸ்மார்ட் ஃபோனான, சாதாரணமாக ரூ. 26,490 க்கு விற்கப்படும் புகழ்பெற்ற Samsung Galaxy A10s, அரசுத் துறை ஊழியர்களுக்கு ரூ. 16,000 என்ற விலையிலும், சாதாரணமாக ரூ. 14,499/- க்கு விற்கப்படும் இன்பமூட்டிடும் அதன் சிறப்பம்சங்களுக்கு புகழ்பெற்ற Huawei Y5 Lite அரசுத் துறை ஊழியர்களுக்கு ரூ. 9,900/- என்ற விலையிலும் வழங்குகிறது.

உபஹார சலுகைத் திட்டத்தின் கீழ் தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற அரச பிரிவின் ஊழியர்களுக்கு இவ்வாறு சிறப்பு விலைக்கு வழங்கப்பட்ட ஃபோன்களுக்கான கொடுப்பனவுகளை கட்டணப்பட்டியலுக்கு சேர்த்திடும் கொடுப்பனவுத் திட்டமொன்றையும் வழங்குகிறது. ஸ்மார்ட் ஃபோன்களுக்கு இவ்வாறான தனித்துவம் மிக்க விலைச் சலுகைகளை வழங்கிடும் ஒரே மொபைல் வலையமைப்பாக மொபிடெல் விளங்குகிறது. இந்த நடவடிக்கையானது சமூகத்தின் பால் அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும் அக்கறையையும் பங்களிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

இச்சலுகையின் கீழ் வழங்கப்படும் இரண்டு சாதனங்களும் நன்மதிப்பு பெற்ற ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமங்களாகும். Samsung A10s ஆனது Samsung As தெரிவுகளுக்குள் இணைந்துள்ள நவீன பதிப்பாகும். இது ஸ்மார்ட் ஃபோனுக்காக நீங்கள் செலவழித்த பணத்திற்கு சிறந்த மதிப்பினை வழங்குகிறது. 6.2” display, 2GB RAM + 32GB ஸ்டோரேஜ், 13MP மற்றும் 2MP முதன்மை இரட்டை கமரா, வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை படம் எடுத்திட 8MP யில் செல்ஃபி கமரா மற்றும் நீடித்து உழைத்திடும் 4000 mAh பட்டரி என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளது. Huawei Y5 Lite, சந்தையில் மிகவும் கட்டுப்படியான விலையிலுள்ள 4G ஸ்மார்ட் ஃபோன் ஆகும். இதை மொபிடெல் உபஹார சலுகைத் திட்டத்தின் கீழ் ஒப்பற்ற விலையில் வழங்குகிறது. இது 5.45´ டிஸ்ப்ளேயினையும், 8MP முதன்மை கமராவினையும், 5MP யில் செல்ஃபி கமராவினையும் கொண்டு மேம்பட்ட அனுபவத்தினை வழங்குகிறது.

Most Viewed