Back to Top

தம்புள்ள செறண்டிப் பினான்ஸ் கிளை அலுவலகம் வசதிகளுடன் கூடிய புதிய இடத்துக்கு மாற்றம்

தம்புள்ள செறண்டிப் பினான்ஸ் கிளை அலுவலகம் வசதிகளுடன் கூடிய புதிய இடத்துக்கு மாற்றம்

November 28, 2019  04:31 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கிக்கு முற்றிலும் சொந்தமான கிளை நிறுவனமான செறண்டிப் பினான்ஸ் வரையறுக்கப்பட்ட நிறுவனம் தம்புள்ளையில் மிகவும் இடவசதி கூடிய புதிய கட்டிடத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்நிறுவனம் தனது நிரந்தர வைப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆகக் கூடிய வட்டி வீதத்தையும் அறிவித்துள்ளது.

தம்புள்ளை கிளையின் புதிய அலுவலகம் இலக்கம் 679 அநுராதபுரம் வீதி தம்புள்ளை என்ற முகவரியில் அமைந்துள்ளது. கொமர்ஷல் வங்கி மற்றும் செறண்டிப் பினான்ஸ் என்பனவற்றின் தலைவர் தர்மாதீரசிங்க புதிய கிளைக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எஸ். ரெங்கநாதன், செறண்டிப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான உபுல் திஸாநாயக்க ஆகியோர் உட்பட சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிட்ச் அமைப்பால் A+ தரம் வழங்கப்பட்டுள்ள செறண்டிப் நிறுவனம் தனியார், வர்த்தக நோக்கு மற்றும் பல்நோக்கு கொண்ட பல்வேறு விதமான வாகனங்களுக்கும் மற்றும் உபகரணங்கள் கருவிகள் என்பனவற்றுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தக் கூடிய வகையிலான இலகுவான குத்தகை சேவைகளை வழங்குகின்றது. நிரந்தர வைப்பு உட்பட பல்வேறு நிதிச் சேவைகளை இந்நிறுவனம் வழங்குகின்றது. சந்தைப் போட்டி அடிப்படையிலான மீள் வருமானம், வர்த்தக நோக்கு கடன்கள், பிணைக் கடன்கள் உட்பட இன்னும் பல கடன் சேவைகளையும் இந்நிறுவனம் வழங்குகின்றது.

இந்திராபினான்ஸ் என்று ஆரம்பத்தில் அறியப்பட்ட இந்நிறுவனம் கொமர்ஷல் வங்கியால் பொறுப்பேற்கப்பட்டு ஒன்பது மாதகாலத்தின் பின் 2015 ல் செறண்டிப் பினான்ஸ் வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்ற பெயரில் மீள ஆரம்பிக்கப்பட்டது. இன்று நாடு முழவதும் பத்து கிளை வலையமைப்போடு இது பணியாற்றி வருகின்றது. ICBS தொழில்நுட்பத்தின் சக்தியோடு இது செயற்படுகின்றது.

இதன் தாய் நிறுவனமான கொமர்ஷல் வங்கி மட்டுமே இதன் ஒரே பங்காளராகும். உலகின் மிகச் சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக இடம் பிடித்துள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி 267 கிளைகளையும், 856 ATM வலையைமைப்பையும் கொண்டுள்ளது. கொமர்ஷல் வங்கி இவ்வாண்டில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது. 2019 ல் இலங்கையில் மக்களை மிகவும் கவர்ந்த 10 கம்பனிகளில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த வெளிநாட்டுச் செயற்பாடு பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டுள்ளது. மியன்மாரில் யங்கூனில் ஒரு பிரதிநிதிகள் அலுவலகத்தையும் நெ பிடாவ்வில் ஒரு நுண் நிதிக் கம்பனியையும் கொண்டுள்ளது. மாலைதீவில் முழு அளவிலான முதல் வரிசை வங்கியை பெரும்பான்மையான பங்குகளுடன் அது கொண்டுள்ளது.

Most Viewed