Back to Top

 மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறப்பு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறப்பு

December 1, 2019  02:28 pm

Bookmark and Share
இதேவேளை, மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கபட்டுள்ளது.

மலையகத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மழை தொடர்ந்தும் பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளும் திறக்கபடுமென மேல் கொத்தமலை நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

Most Viewed