Back to Top

மலபத்தாவ மண்சரிவில் சிக்குண்ட மூவரின் சடலங்கள் மீட்பு

மலபத்தாவ மண்சரிவில் சிக்குண்ட மூவரின் சடலங்கள் மீட்பு

December 1, 2019  02:41 pm

Bookmark and Share
நுவரெலியா, மலபத்தாவ பகுதியில் நேற்றிரவு (30) 7.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்ட நான்கு பேரில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கபட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ள மற்றுமொரு நபரை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நுவரெலியா, பதியபெலெல்ல, மலபத்தாவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று இரவு மண்மேடு சரிந்து விழுந்தமையினாலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு நுவரெலியாவில் இருந்து மேஜர் அசித்தரன திலக்க தலைமையில் இராணுவப்படை வரவழைக்கபட்டு தேடும் நடவடிக்கையினை மேற்கொண்ட போது கணவன், மனைவி மற்றும் அவர்களின் பேர பிள்ளை ஆகியோரின் சடலங்கள் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்ற உள்ள மாணவரை தேடு பணியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



-மலையக நிருபர் சதீஸ்குமார்-

Most Viewed