Back to Top

4 வீடுகள் இடிந்து 15 பேர் பலி

4 வீடுகள் இடிந்து 15 பேர் பலி

December 2, 2019  11:37 am

Bookmark and Share
கோவை மாவட்டத்தில் மேட்டுப் பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள நடூர் கிராமத்தில் மழையால் வீடுகள் இடிந்ததில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், இங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நடூர் கிராமத்தில், ஏ டி காலனி என்ற பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

நேற்று இந்தப் பகுதிகளில் கனமழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் 180.33 மி.மீ, அன்னூர் பகுதியில் 36 மி.மீ அளவிற்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் பெண்கள், சிறுமிகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Most Viewed