Back to Top

மண்சரிவு அபாயம் காரணமாக 46 குடும்பங்கள் அகற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக 46 குடும்பங்கள் அகற்றம்

December 2, 2019  12:06 pm

Bookmark and Share
மழையுடனான காலநிலையினால் மண்சரிவு அபாயம் இருப்பதனால் மடுல்சீமை தோட்டப்பகுதிக்கு உட்பட்ட கல்உல்லவத்த, டுமொ பகுதியில் உள்ள 46 குடும்பங்களை சேர்ந்த 187 பேர் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

இன்று (02) காலை இவ்வாறு அவர்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டவர்கள் கல்உல்லவத்த தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 98 பெண்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் கர்ப்பிணி தாய்மார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

Most Viewed