
வாழ்த்து பதாகையை அகற்றிய ஜனாதிபதி
December 2, 2019 09:09 pm
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க பகுதியில்
அமைக்கப்பட்டிருந்த பதாகை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழையும்
பகுதியில் பதாகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இந்திய விஜயத்தின் முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்த
ஜனாதிபதி இந்த பதாகையை அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த பதாகையை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், அதற்கமைய குறித்த
பதாகை இன்று அகற்றப்பட்டுள்ளது.
இந்த பதாகை கடந்த 2008 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் தற்போது அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள
வர்ணங்கள் பொழிவை இழந்து காணப்பட்டதாகவும் அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.