Back to Top

Mahindra & Mahindra மற்றும் Ideal Motors ஒன்றிணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் Mahindra Furio உற்பத்தி வரிசை ICV டிரக் வண்டிகள்

Mahindra & Mahindra மற்றும் Ideal Motors ஒன்றிணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் Mahindra Furio உற்பத்தி வரிசை ICV டிரக் வண்டிகள்

January 8, 2020  03:56 pm

Bookmark and Share
20.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான Mahindra Group இன் அங்கமான Mahindra & Mahindra Ltd மற்றும் இதன் இலங்கைப் பங்காளரான Ideal Group இன் அங்கமான Ideal Motors (Pvt) Ltd ஆகியன இணைந்து இடைநிலை வர்த்தகப் பாவனை டிரக் வண்டியான Mahindra Furio இனை அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

தேசத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 6 சக்கர டிரக் வண்டியாக Mahindra Furio மாறியுள்ளது. 17 அடி, 19 அடி, 20 அடி. 22 அடி மற்றும் 24 அடி நீளங்களில் சுமையை ஏற்றக்கூடிய உடல் மேற்பாகங்களுடன் Drop Side Deck, High Side Deck வடிவங்களில் வண்டி மற்றும் அடிச்சட்டங்களுடன் பல்வேறு தயாரிப்பு வடிவங்களில் Furio இனை அறிமுகப்படுத்துவதற்கு Ideal Motors திட்டமிட்டுள்ளது.

Mahindra & Mahindra Ltd இன் சர்வதேச தொழிற்பாடுகளுக்கான (தெற்காசியா) பிரதித் தலைமை அதிகாரியான சஞ்சய் ஜாதவ் அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், ´இலங்கையிலுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு Furio தயாரிப்பு ICV டிரக் வண்டிகளை அறிமுகப்படுத்துவது எமக்கு பெருமகிழ்ச்சி அளிக்கின்றது. இது வரை கண்டிராத பெறுமானத் திட்டம், ஈடுஇணையற்ற பாதுகாப்பு சிறப்பம்சங்கள், நன்கு வடிவமைக்கப்பட்ட, சௌகரியமான சாரதிக்கூடம் ஆகியவற்றுடன் எமக்கும், தொழிற்துறையிலும் புதிய தராதரங்களை ஏற்படுத்தி, போக்கினை மாற்றியமைக்கும் ஒன்றாக Furio விளங்கும் என உறுதியாக நம்புகின்றேன்,´ என்று குறிப்பிட்டார்.

Ideal Motors இன் பணிப்பாளர் சபைத் தலைவரான நளின் வெல்கம அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ´இலங்கையில் நாம் முதன்முறையாக ICV டிரக் வண்டிகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச தராதரங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு டிரக் வண்டியாக Furio காணப்படுகின்றது. தற்சமயம் சந்தையில் single cab, இலகுரக வர்த்தகப் பாவனை, இடைநிலை வர்த்தகப் பாவனை மற்றும் கனரக வாகனங்கள் காணப்படுவதுடன், Mahindra Furio ஆனது ஒரு இடைநிலை வர்த்தகப் பாவனை வாகனமாகும். Furio High Side Deck தயாரிப்பு வடிவமானது இந்த வகையில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதலாவது வாகனம் என்பதுடன், உள்நாட்டுச் சந்தையில் அதற்கான வளர்ச்சி வாய்ப்புக்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன,´ என்று குறிப்பிட்டார்.

Mahindra Furio ஆனது பொருட்களை ஏற்றிச் செல்வதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Mahindra Furio GW 14000 தயாரிப்பு வடிவமானது Euro 4 இணக்கப்பாடு கொண்ட 3,500cc டீசல் எந்திரத்தைக் கொண்டுள்ளதுடன், 140HP வெளிவீச்சைக் கொண்டது. ABS brakes, 6-speed overdrive transmission தொழில்நுட்பத்துடன், Mahindra இன் காப்புரிமை கொண்ட FuelSmart தொழில்நுட்பத்தில் நாட்டில் தற்போது கிடைக்கப்பெறுகின்ற மிகவும் சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்கான நவீன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்பமானது வாடிக்கையாளர்களுக்கு உயர் மட்டத்தில் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றது. ஒரே தடவையில் 10 தொன் சுமையை இந்த டிரக் வண்டியால் காவிச் செல்ல முடியும். Brake Bar system மற்றும் 363mm diameter organic clutch, adjustable steering wheel, adjustable driver and passenger seats மற்றும் sleeper cabin அடங்கலாக பல்வேறு விசேட தொழில்நுட்பங்களை Mahindra Furio கொண்டுள்ளது.

Euro4 தொழில்நுட்பத்தில் இந்த டிரக் வண்டிகள் தயாரிக்கப்படுகின்றமையால், 40,000 கிமீ பாவனையின் பின்னர் பேணற்சேவையை மேற்கொள்ளலாம். எந்திரத்தின் பேணற்சேவைகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் சாரதிக்கூடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 வருடங்கள் அல்லது 200,000 கிமீ பாவனை என்ற நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை நிறுவனம் வழங்குகின்றது. நாடளாவியரீதியிலுள்ள Ideal Motors இன் சேவை மையங்களின் வலையமைப்பினூடாக அதிசிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவையை வழங்குவதில் Mahindra தீவிரமான அர்ப்பணிப்படன் உள்ளது. மேலும், இந்தியாவில் Mahindra நிறுவனத்தில் விசேட பயிற்சிகளைக் பெற்றுக்கொண்ட பல தொழில்நுட்ப அலுவர்களையும் Ideal Motors கொண்டுள்ளது.

Mahindra நிறுவனம் தொடர்பான விபரங்கள்

புத்தாக்கமான போக்குவரத்து தீர்வுகள் மூலமாக மக்கள் எழுச்சி காண்பதற்கு இடமளித்து, கிராமிய சுபீட்சத்தை முன்னெடுத்து, நகரப்புற வாழ்வை மேம்படுத்தி, புதிய வர்த்தக முயற்சிகளை வளர்த்து மற்றும் சமூகங்களை வளர்ச்சி பெறச் செய்யும் வகையில் 20.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் சம்மேளனமாக Mahindra Group காணப்படுகின்றது. பாவனை வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள் மற்றும் விடுமுறை உரிமையாண்மை ஆகியவற்றில் இந்தியாவில் சந்தை முன்னோடி ஸ்தானத்தைக் கொண்டுள்ளதுடன், உலகிலேயே மிகப் பாரிய டிராக்டர் நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. விவசாய வர்த்தகம், வான்வெளி, வர்த்தகப் பாவனை வாகனங்கள், பாகங்கள், பாதுகாப்பு, பண்ட போக்குவரத்து, அசைவற்ற ஆதன இருப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விசைப்படகுகள் மற்றும் உருக்கு ஆகிய வர்த்தகங்களில் வலுவான இருப்பினைக் கொண்டுள்ளதுடன், மேலும் பல விபாயார தொழிற்பாடுகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் தனது தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள Mahindra, 100 நாடுகள் மத்தியில் 240,000 இற்கும் மேற்பட்ட மக்களை பணியில் அமர்த்தியுள்ளது.

Mahindra தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.mahindra.com / Twitter மற்றும் Facebook: @MahindraRise