Back to Top

தொழிற்துறைசார் கழிவுகளை பெறுமதியான வளங்களாக மாற்றும் மாபெரும் திட்டத்தை முன்னெடுக்க வளங்கள் மீட்சி நிலையத்தை INSEE Ecocycle நிறுவியுள்ளது

தொழிற்துறைசார் கழிவுகளை பெறுமதியான வளங்களாக மாற்றும் மாபெரும் திட்டத்தை முன்னெடுக்க வளங்கள் மீட்சி நிலையத்தை INSEE Ecocycle நிறுவியுள்ளது

January 9, 2020  03:53 pm

Bookmark and Share
தொழிற்துறைசார் கழிவுகளை பெறுமதி வாய்ந்த வளங்களாக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்காக ´வளங்கள் மீட்சி நிலையமொன்றை´ (Resource Recovery Center), INSEE Ecocycle நிறுவனம் நிறுவியுள்ளது. இலங்கையில் தொழிற்துறைசார் கழிவு முகாமைத்துவ சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த INSEE Ecocycle நிறுவனத்துடன் கை கோர்த்து இந்த திட்டத்தை முன்னெடுக்க யுனிலீவர் ஸ்ரீ லங்காநிறுவனம் முன்வந்துள்ளது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைக்கான தாய்லாந்தின் தூதுவர் மதிப்புக்குரிய சுளாமனீசார்ட்சுவான் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில், யுனிலீவர் ஸ்ரீ லங்காவின் CCBT உணவுகள் மற்றும் பானங்கள் பிரிவின் தலைமை அதிகாரியும் விநியோகத் தொடர் பணிப்பாளருமான ஜெராட் இருதயராஜ் INSEE Ecocycle உடநலங்கா (பிரைவட்) லிமிடெட் பணிப்பாளர் சஞ்ஜீவ சூளகுமார, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ், INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நந்தன ஏக்கநாயக்க, அவர்களுடன் INSEE சீமெந்து, INSEE Ecocycle, யுனிலீவர் ஸ்ரீ லங்கா போன்ற நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது கழிவுகள் நீக்கப்பட்ட வளம்மிக்க நாட்டை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவதற்காக INSEE Ecocycle மற்றும் யுனிலீவர் ஸ்ரீ லங்கா ஆகிய நிறுவனங்களுக்கிடையே பங்காண்மை உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

2025 ஆம் ஆண்டளவில் பிளாஸ்ரிக் பாவனையை 50% இனால் குறைப்பது எனும் யுனிலீவர் நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் பிளாஸ்ரிக் கழிவற்ற சூழலை ஏற்படுத்த உதவுவது போன்றவற்றுக்கு பங்களிப்பு வழங்க INSEE Ecocycle முன்வந்துள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட வளங்கள் மீட்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதுடன், கழிவுகளை அகற்றி வினைத்திறனான மற்றும் நிலைபேறான வகையில் வளங்கள் பயன்படுத்தப்பட்டு, சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாட்டை வழிநடத்துவதில் பங்களிப்பு வழங்கும் INSEE Ecocycle ஐ பொறுத்த மட்டில் இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது.

FMCG மற்றும் நுகர்வோர் கழிவுகளை வகைப்படுத்தல், தூய்மைப்படுத்தல், மீள்பயன்பாடு மற்றும் மீள்சுழற்சி செயன்முறைகளினூடாக திட்டமிடப்பட்ட சேகரிக்கும் முறைமையை INSEE Ecocycle இன் வளங்கள் மீட்சி நிலையம் உறுதி செய்யும். வௌவேறு மீள்சுழற்சி பங்காளர்களின் பங்களிப்புடன் கழிவகற்றப்பட்ட பொருட்களின் மீட்சி முன்னெடுக்கப்படும்.

INSEE Ecocycle இனால் நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம், திறன்கள் படைத்தவளங்கள், அனுபவம் மற்றும் நிபுணத்துவ சேவைகள் போன்றவற்றினூடாக வியாபாரங்களுக்கு கழிவு முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் உறுதி செய்துள்ளதுடன், கூட்டாண்மை நிறுவனங்களுக்கு தமது நிலைபேறாண்மை இலக்குகளை பூர்த்தி செய்வதிலும் உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை புரட்சிக்குட்படுத்தி, பாரம்பரிய மீள்சுழற்சிமுறைகளுக்கு அப்பால் சென்று, உயர் கழிவு முகாமைத்துவ செயன்முறைகளை ஈடுபடுத்தி கழிவுகளை பெறுமதி வாய்ந்தவளங்களாக மாற்றியமைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது. இதன் பெறுபேறாக, கழிவுகள் நிலத்தை நிரப்பும் பகுதிகளில் கொட்டப்படமாட்டாது. கழிவுகளுடன் தொடர்புடைய பொருளாதார, சமூக மற்றும் சூழல் செலவுகள் இல்லாமல் செய்யப்படுவதுடன், வளங்கள் பாவனையில் குறைந்தளவு தங்கியிருப்பதுடன், சூழலுக்கு பங்களிப்பு வழங்கி சிறந்த பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கக் கூடியதாக இருக்கும்.

புதிய வளங்கள் மீட்சி நிலையத்துக்கு மேலதிகமாக, INSEE Ecocycle இனால் நிலைபேறான சூழலுக்கு நட்பான தொழிற்துறைசார் தீர்வுகள் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக தொழிற்துறைசார் அபாயகரமான கழிவுகள், அபாயகர மற்ற கழிவுகள் நிர்வாகம் மற்றும் வர்த்தக நாமங்களுடன் நெருக்கமான தொடர்புடைய கழிவுகளை அகற்றல் போன்ற தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

சூழலை பாதுகாக்கும் வகையில் வருடாந்தம் 800,000 மெட்ரிக் டொன்கள் வரையான கழிவுகளை பொறுப்பு வாய்ந்த வகையில் அகற்றிக் கொள்வதற்கு 700 க்கும் அதிகமான கூட்டாண்மை நிறுவனங்களுக்கு INSEE Ecocycle உதவிகளை வழங்கிய வண்ணமுள்ளது. Ecocycle வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதற்காக இதுவரையில் குறித்த நிறுவனமானது 1.5 பில்லியன் ரூபாய்களுக்கு அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதுடன், நாட்டில் காணப்படும் சிறந்த கழிவு அகற்றல் தீர்வுகளை வழங்கும் சிறந்த நிறுவனமாகவும் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.