Back to Top

நவீன தொழில்நுட்பத்துடன் முன் கூட்டி பணம் செலுத்தப்பட்ட பயணக் கார்ட்டுகளை (Pre-paid Travel Card) அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

நவீன தொழில்நுட்பத்துடன் முன் கூட்டி பணம் செலுத்தப்பட்ட பயணக் கார்ட்டுகளை (Pre-paid Travel Card) அறிமுகம் செய்துள்ள கொமர்ஷல் வங்கி

January 14, 2020  09:46 am

Bookmark and Share
கொமர்ஷல் வங்கி அதன் அதிநவீன கார்ட் வகையை அறிமுகம் செய்துள்ளது. இது முன் கூட்டிபணம் செலுத்தப்பட்ட ஒரு கார்ட் முறையாகும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்கின்ற போது வாடிக்கையாளர்களின் அனுபவம் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் புதிய அறிமுகம் அமைந்துள்ளது.

உலகின் முன்னணி கொடுப்பனவு வலைபின்னலான விசா முறையுடன் இணைந்து இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர், பிரிட்டிஷ் பவுண், யூரோ, சிங்கப்பூர் டொலர், அவுஸ்திரேலியன் டொலர் ஆகிய ஐந்து நாடுகளின் பணத்தில் இது விநியோகிக்ககப்படுகின்றது.

இந்த கார்ட்டுகள் NFC மற்றும் PIN தொழில்நுட்பம் கொண்டவை. உலகம் முழுவதும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தும் வசதிகள் கொண்டவை. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் இதைப் பெற்றுக் கொள்ள முடியும். நாடு முழுவதும் உள்ள வங்கியின் 268 கிளைகள் ஊடாகவும் இதைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவருக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் வெளிநாட்டு பணத்தின் தொகைக்கு ஏற்ற விதத்தில் பணத்தை செலுத்தி இந்த கார்ட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கார்ட்டின் பாவனைக் காலம் முடியும் வரை மீண்டும் மீண்டும் வெளிநாட்டுப் பயணங்களின் போது அதற்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி இதை மீள்பாவனைக்கு உட்படுத்தலாம். இலங்கையில் அமுல் செய்யப்படும் வெளிநாட்டு நாணயமாற்று முகாமைத்துவம் மற்றும் நாணயச் சலவை எதிர்ப்பு நடைமுறைகள் என்பனவற்றுக்கு இசைவாகவே இது விநியோகிக்கப்படுகின்றது என வங்கி அறிவித்துள்ளது.

முன் கூட்டி பணம் செலுத்தப்பட்ட இந்த அட்டையை கொள்வனவுகள், இணையவழி பரிமாற்றங்கள், வெளிநாடுகளில் ATM செயற்பாடுகள் என்பனவற்றுக்குப் பயன்படுத்தலாம். கொடுப்பனவுகள் வாடிக்கையாளரின் முன்செலுத்திய கார்ட் பெறப்பட்ட கணக்கில் கார்ட்டில் பெயரிடப்பட்டுள்ள நாணயஅலகில் பதியப்படும். ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலுக்கும் SMS மூலமான அறிவித்தல் வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும். கொமர்ஷல் வங்கியின் இணையவழி செயற்பாட்டின் மூலமும் மற்றும் வங்கியின் இணையத்தளத்தில் உள்ள விஷேட பிரிவின் மூலமும் வாடிக்கையாளர் தனது அட்டையில் எஞ்சியுள்ள பணத்தின் மீதியையும் அறிந்து கொள்ளலாம்.

´வெளிநாடுகளுக்கு செல்லுகின்ற போது மிகவும் பாதுகாப்பான முறையில் பணத்தைக் கையாளவும் மிக விரைவாக கொடுப்பனவுகளைச் செய்யவும் இந்த முன்கூட்டி பணம் செலுத்திய கார்ட் முறை மிகச் சிறந்த வழிமுறையாகும்´ என்று கொமர்ஷல் வங்கியின் கார்ட் பிரிவு தலைவர் துஷித சுரவீர கூறினார். ´கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகளைப் ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு நிறுவனத்திலும் அதேபோல் ATM இயந்திரங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். இது வாடிக்கையாளருக்கு வழங்கும் பிரதான நன்மைகளில் ஒன்று வெளிநாட்டு நாணய மாற்று விகித தளம்பல் நிலையில் இருந்து அவரைப் பாதுகாப்பதாகும்´ என்று அவர் மேலும் கூறினார்.

கொமர்ஷல் வங்கி கார்ட்டுகள் தான் இலங்கையில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் கார்ட்டுகளாகும். கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் வகைகளிலும் அவற்றோடு சம்பந்தப்பட்ட விற்பனைகளிலும் சந்தை தலைமைத்துவத்தையும் இந்த கார்ட்டுகளே கொண்டுள்ளன. சில்வர், கோல்ட், பிளேடினம் விஸா மற்றும் மாஸ்டர்கார்ட் வகைகளையும், யூனியன் பே கார்ட், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர்கார்ட், விஸா இன்பினைட் கார்ட்ஸ், யூனியன் பே ஏஸியா பிரஸ்டீஜ் பிளேட்டினம், யூனியன் பே ஏஸியாபிரஸ்டீஜ் டயமன்ட் கார்ட்ஸ் என பல்வகை கார்ட்டுகளை கொமர்ஷல் வங்கி விநியோகிக்கின்றது. கார்ட்டுகள் டெப் அன்ட் கோ NFC தொழில்நுட்பத்தைகொண்டவை. உறுதியான NFC PO விற்பனை வலையமைப்பையும் இவை கொண்டுள்ளன. தொடர்ந்து ஒன்பது வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 268 கிளைகளுடனும், 865 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. 2018 மற்றும் 2019 ல் மட்டும் 80 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது. 2019ம் ஆண்டில் இலங்கை மக்களின் பாராட்டை வென்றுள்ள மிகச் சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாகவும் கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.