Back to Top

 Age of experience க்கு வழிகோலும் Samsung புத்தாக்கங்கள்

Age of experience க்கு வழிகோலும் Samsung புத்தாக்கங்கள்

January 14, 2020  03:18 pm

Bookmark and Share
வருடத்தின் ஆரம்பத்தில், கடந்த கால அனுபவங்களை மீட்டு, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது வழமையாகும். எம்முன்னால் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மதிப்பிட்டு, எதிர்காலத்துக்காக திட்டமிடும் சந்தர்ப்பமாக அமைந்திருக்கும்.

இதை திட்டமிடுவதற்கு மிகவும் சிறந்த பகுதியாக லாஸ் வெகாஸ் நகரில் இடம்பெறவுள்ள உலகின் மாபெரும் நுகர்வோர் தொழில்நுட்ப மாநாடான CES 2020 அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளதுடன், எமது துறையின் புத்தாக்கமானவர்கள் ஒன்றுகூடி, அனைவருக்கும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் பற்றிய விளக்கங்களை பெற்றுக் கொள்வார்கள்.

உலகின் மாறிவரும் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக CES நிகழ்வில் Samsung ஸ்ரீ லங்கா சார்பாக பங்கேற்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனாலும், இந்த ஆண்டு மிகவும் பிரத்தியேகமானது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். புதிய தசாப்தத்தின் ஆரம்பமாக அமைந்துள்ளதுடன், 2020 போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டினூடாக, கடந்த பத்து வருடங்களில் நாம் கடந்து வந்த பயணம் தொடர்பில் மீட்டுப்பார்க்கவும் ஏதுவாக அமைந்துள்ளது. நான் மீட்டுப்பார்க்கையில், பெருமளவு முன்னேற்றங்கள் நிறைந்த ஒரு தசாப்த காலத்தை நான் காண்கின்றேன். மதிநுட்பமான, இணைப்புகளை கொண்ட மொபைல் சாதனங்கள் மிகவும் புகழ்பெற ஆரம்பித்தன, Internet of Things (IoT), 2010 இல் nascent, தொழில்நுட்பத்தில் மாபெரும் பிரிவுகளாக வளர்ச்சியடைந்திருந்தன. இன்றைய காலகட்டத்தில், எமது பெரும்பாலான சாதனங்களில், IoT செயற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அவற்றை இணைப்புகளை கொண்டதாகவும், மதிநுட்பமானவையாகவும் தயாரிப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைப்போம். மேலும் artificial intelligence (AI) படிப்படியாக வளர்ச்சியடைந்து, எமது வாழ்நாளில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. நாம் வாழும் மற்றும் பணியாற்றும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

புதிய தசாப்தத்துக்காக நாம் லாஸ் வெகாஸ் நகரில் ஒன்றுகூடி, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மாற்றங்கள் பற்றி ஆராயவுள்ள நிலையில், Samsung ஐச் சேர்ந்த நாம் எதிர்கால வாய்ப்புகளை காண்கின்றோம். AI மற்றும் IoT ஆகியவற்றின் வளர்ச்சியுடன், 5G வலையமைப்பின் வலுவூட்டலுடன், 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம், மதிநுட்பமாக இணைக்கப்பட்ட உலகம் எனும் எமது நோக்கத்தை சாத்தியமாக்கும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்காலத்தை புரிந்து கொள்ளும் வகையில், வாடிக்கையாளர்களின் மாறி வரும் விருப்பங்கள் மற்றும் ஈடுபாடுகள் பற்றி நாம் அறிந்திருப்பதனூடாக எமது நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருக்கும். இன்று, துரித நகரமயமாக்கல் மற்றும் புவியியல் மாற்றங்கள் போன்றன எமது உலகின் தோற்றத்தை மாற்றியமைத்த வண்ணமுள்ளன. இந்த மாற்றங்களுடன் புத்தாக்கத்துக்கான பெருமளவான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கும், சமூகத்துக்கும் புதிய பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. நாம் முன்னோக்கி பார்க்கும் போது, மக்கள் அதிகளவான தேவைகளை கொண்டிருப்பார்கள் என்பது எமக்கு புலப்படுகின்றது. பொருட்கள் மாத்திரமன்றி, இந்த தொழில்நுட்பங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு மேலும் அர்த்தமுள்ளவையாக அமைந்திருக்கும் வகையிலான அனுபவங்களை கொண்டிருப்பதை எதிர்பார்க்கின்றனர்.

எனவே புதிய தசாப்தத்தின் ஆரம்பத்துடன், தொழில்நுட்பத்தின் புதிய கால கட்டமாக he Age of Experience ஐ நாம் காண்கின்றோம். இது உங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பிரத்தியேகமான தொழில்நுட்பத்தினால் வரையறுக்கப்பட்டிருக்கும். அதாவது நீங்கள் பயன்படுத்தும் சாதனங்கள் உங்களை தனிநபராக புரிந்து கொள்ளும் என்பதுடன், டிஜிட்டல் மற்றும் நிஜ உலகின் இடையில் காணப்படும் எல்லைகளை இல்லாமல் செய்வதாக இருப்பதுடன், உங்கள் நகரங்கள் மற்றும் சமூகங்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

Age of Experience இனூடாக, தொழில்நுட்பத்துடன் தனிப்பட்ட வகையில் நிலையான இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், கடந்த காலங்களில் இது சாத்தியமானதாக அமைந்திருக்கவில்லை. மேலதிக சாதனங்களை உள்வாங்கும் உங்கள் வழமையான செயற்பாட்டை மாற்றி, உங்கள் சாதனங்கள் ஒப்பற்ற வகையில் உங்களுக்காக செயலாற்றும். உங்கள் தேவைகளுக்கு மட்டும் துலங்களை காண்பிக்காமல், உங்களுக்கு உதவும் ‘intelligent companion’ உடன் உங்களால் எந்தளவு பணியையும் இலகுவாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இந்த Age of Experience இல் முன்னோடியாக திகழும் வகையில் Samsung தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்பது மிகவும் விறுவிறுப்பானதாக அமைந்துள்ளது. IoT, AI மற்றும் 5G ஆகியவற்றில் எமது பாரிய முதலீடுகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட தலைமைத்துவம் ஆகியன, எதிர்காலத்தில் நாம் தொழில்நுட்பங்களினூடாக கட்டியெழுப்பும் அனுபவங்கள் இன்றே Samsung இனால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Samsung ஐ பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமான அங்கம் யாதெனில் மற்றும் CES இல் நான் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கும் விடயமுமாக - இந்த சகல மேம்படுத்தல்களும் சிறந்த விடயங்களுக்காக நகர்வதை உறுதி செய்வதற்கான எமது அர்ப்பணிப்பாக அமைந்துள்ளதை வெள்படுத்து எதாகும் அமைந்திருக்கும். அனைவருக்கும் சிறந்த பகுதியை உருவாக்குவதற்கு, எமது அனுபவங்களை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு காணப்படுகின்றது என்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். Samsung இல் புத்தாக்கம் என்பது மனித ஆற்றலை மேம்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், மனிதத்தை மேம்படுத்துவதில் தொழில்நுட்பங்களின் ஆற்றலை வெளிப்படுத்த எமது பெறுமதி வாய்ந்த பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. Age of Experience என்பது 2020 ஆம் ஆண்டுக்கும், எதிர்வரும் காலப்பகுதிக்கும் உயர்ந்த இலக்காக அமைந்திருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நிறைவில், புத்தாக்கம் என்பது அதற்கான இலக்காக அமைந்திருக்கவில்லை, சமூகமாக சிறந்த உலகை உருவாக்க ஆரம்ப பகுதியாக அமைந்துள்ளது – வாடிக்கையாளர்கள், புத்தாக்கவியலாளர்கள் முதல் உங்கள் இல்லங்களில் காணப்படும் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் சிறந்த நாளையை உருவாக்குவதற்காக இணைந்து செயலாற்றலாம். நாம் பெருமளவான உள்ளம்சங்களை எம்வசம் கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டிலும் எதிர்காலத்திலும் Age of Experience எவ்வாறு உயிரூட்டுவதாக அமைந்திருக்கும் என்பது தொடர்பில் மேலதிக விடயங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதையிட்டு நான் அதிகம் மகிழ்ச்சியடைகின்றேன்.