Back to Top

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது

January 14, 2020  05:35 pm

Bookmark and Share
வலைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையின் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போதுமான அளவு நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மேலதிகமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார்.

முலன திக்வெல என்ற இடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அடுத்த வருடத்தில் பாரிய அளவில் எரிபொருள் சுத்திகரிப்புக்கான இலக்கை இலங்கை கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தற்பொழுது எரிபொருள் நேரடியாக கொண்டுவரப்படுவதாகவும் நாட்டில் சுத்திகரிப்பக்கான வசதிகள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் தெரிவித்தார். அது பெரும் நட்டமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

(அரசாங்க தகவல் திணைக்களம்)