Back to Top

பிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம்

பிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம்

January 24, 2020  04:04 pm

Bookmark and Share
பிரதேச ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாத்தளை மாவட்ட இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்தப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இது தொடர்பாக பிரதமர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவை முறையாக பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடி பொறிமுறை ஒன்றும் வகுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Most Viewed