Back to Top

கொரோனா வைரஸ் - இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை

கொரோனா வைரஸ் - இலங்கையர்கள் தொடர்பில் அமைச்சு நடவடிக்கை

January 24, 2020  04:39 pm

Bookmark and Share
சீனாவின் ஹுவாங்காங்க் நகரில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மாணவர்களுடன் முடிந்த வரையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக சீனாவின் ஹுவாங்காங்க் நகரத்தை முழுமையாக மூடுவதற்கு அந் நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு கல்வி பயிலும் 44 இலங்கை மாணவர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஹுவாங்காங்க் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்த மாநில அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஹுவாங்காங்க் மாநிலத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களது தகவல்களையும் பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் திரட்டியுள்ளது. இவர்களுடனான தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சியிலும் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இதேவேளை சீனாவில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட அறிப்புக்களை விடுத்துள்ளது.

தற்போது அங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நடமாட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரையில் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் வலியுறுத்தப்பட்டள்ளது.

சில வேளைகளில் நோய்த் தாக்கம் ஏற்பட்டால் உடனடியாக அந் நாட்டு சுகாதார பிரிவிற்கு அறிவிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அங்குள்ள நிலைமைகளை தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Most Viewed