Back to Top

உறுதியளிக்கப்பட்ட தொழிற்பயிற்சிகளுடன் 3 வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT

உறுதியளிக்கப்பட்ட தொழிற்பயிற்சிகளுடன் 3 வருட பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் ESOFT

February 14, 2020  04:23 pm

Bookmark and Share
நாடு முழுவதிலும் 40 க்கும் அதிகமான கிளை வலையமைப்பைக் கொண்ட வருடாந்தம் 35000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை வழங்கும், இலங்கையின் மாபெரும் தனியார் துறை உயர்கல்விச் சேவையை வழங்கும் ESOFT மெட்ரோ கம்பஸ், தற்போது பரிபூரண மூன்றாண்டு கால பட்டப்படிப்புகளை லண்டனின் பெருமைக்குரிய கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கற்கைகள் வழமையான உயர் டிப்ளோமா தொடர்ந்து, அதன் பின்னர் ‘top-up’ பட்டத்தை பிரிதொரு பல்கலைக்கழகத்தினூடாக பெறும் முறைமைக்கு மாறாக, மூன்று வருட கற்கைகளையும் ஒரே பல்கலைக்கழகத்தில் தொடரக்கூடிய வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். இதனூடாக, மாணவர்கள் தாம் தொடரும் பட்டப்படிப்பை ஒரே கல்வியகத்தில் தொடர்கின்றமையால் அதிகளவு வரவேற்பு காணப்படுவதுடன், முக்கியமாக இலங்கையில் இயங்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் தரப்படுத்தலைப் பெற்ற கல்வியகத்திடமிருந்து பெறப்படுகின்றமையும் விசேடம்சமாக அமைந்திருக்கும்.

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம், 1899 ஆம் ஆண்டு தென்மேற்கு லண்டன் பகுதியில் நிறுவப்பட்ட பொது ஆய்வு பல்கலைக்கழகமாக அமைந்துள்ளது. கலை வடிவமைப்பு, நவநாகரீகம், விஞ்ஞானம், பொறியியல் மற்றும் வியாபாரம் ஆகிய கற்கைகளில் நிபுணத்துவம் பெற்ற நவீன பல்கலைக்கழகமாக தன்னை கட்டியெழுப்பியுள்ளது. நான்கு பல்கலைக்கழகங்களில் ஐந்து பீடங்களை கொண்டுள்ளதுடன், சுமார் 20,000 மாணவர் தொகையை கொண்டுள்ளது. வளர்ந்து வரும் சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ளதுடன், முன்னணி ஆய்வு மற்றும் சர்வதேச பங்காண்மைகளை கொண்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் கார்டியன் பல்கலைக்கழக தரப்படுத்தல்களில் 48 ஆம் ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தினால், BSc (Hons) Cyber Security and Digital Forensics, BSc (Hons) Computer Science (Software Engineering), BSc (Hons) Computer Science (Networking and Network Security), BSc (Hons) Computer Science (Web and Mobile Application Development), மற்றும் BSc (Hons) Multimedia Technology ஆகிய ஐந்து பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் பிந்திய விடயங்களை உள்வாங்கும் வகையில் இந்த பட்டப்படிப்புகள் அமைந்துள்ளதுடன், துறைசார் முன்னோடிகளுடன் ஈடுபாட்டுடனான கைகோர்ப்புடன் வலிமையூட்டப்பட்டுள்ளது, மாணவர்களை தாம் தெரிவு செய்து கொண்ட கற்கைசார் தொழில்நிலையில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு தயார்ப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இரண்டாம் ஆண்டின் நிறைவில், மாணவர் தெரிவு செய்த கற்கைநெறியுடன் தொடர்புடைய துறையில் இயங்கும் நிறுவனமொன்றில் 3 -6 மாத காலப்பகுதிக்கு தொழில் பயிற்சியை பெற்றுக் கொள்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள். இதனூடாக மாணவருக்கு, தொழிற்துறை சூழலுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொள்வதனூடாக கற்கை நெறியை பூர்த்தி செய்த பின்னர் தொழிலை மேற்கொள்வதற்கு முழுமையாக தயார் நிலையில் இருக்கக்கூடியதாக இருப்பார்கள்.

கல்வியகத்தில் காணப்படும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களினூடாக, மாணவர்கள் சரியான முறையில் கற்கையை பின்தொடர்வதை உறுதி செய்து, சர்வதேச ரீதியில் தொழில் மேற்கொள்ளக்கூடியவர்களாக அறிவு மற்றும் நிபுணத்துவ திறன்களை வழங்கி தயார்ப்படுத்துவார்கள். மல்டிமீடியா வசதிகளைக் கொண்ட வகுப்பறைகள், நவீன வலையமைப்பு சாதனம், நவீன வசதிகள் படைத்த கணினி ஆய்வுகூடம், பொழுதுபோக்கு பகுதிகள், WiFi ஹொட்ஸ்பொட் பகுதிகள், பரிபூரண நூலக சேவைகள் மற்றும் போதியளவு வாகன தரிப்பிட வசதிகள் போன்றவற்றை கொணடுள்ளது.

தமது உயர் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் போது, ஒவ்வொது A சித்திக்கும் 150,000, B சித்திக்கும் ரூ. 100,000 மற்றும் C சித்திக்கும் 75,000 வரை மொத்த கற்றை கட்டணத்திலிருந்து விலைக்கழிவை பெறலாம். வட்டியில்லாத மாதாந்த கட்டணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகின்றது.

Most Viewed