Back to Top

இன்டர்நேஷனல் பினான்ஸால் இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி

இன்டர்நேஷனல் பினான்ஸால் இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி

February 14, 2020  04:29 pm

Bookmark and Share
ஐக்கிய இராச்சியத்தின் இன்டர்நேஷனல் பினான்ஸ் இலங்கையில் 2019ம் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வங்கி மற்றும் சிறந்த கூட்டாண்மை வங்கி ஆகிய இரண்டு விருதுகளை கொமர்ஷல் வங்கிக்கு வழங்கி உள்ளது.

துபாயில் உள்ள ஜுமெய்ரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. வங்கியின் கூட்டாண்மை மற்றும் வர்த்தக நிதிப்பிரிவு உதவிப் பொது முகாமையாளர் B.A.H.S பிரீனா வங்கியின் சார்பாக இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

இன்டர்நேஷனல் பினான்ஸ் சஞ்சிகையால் தொடர்ச்சியாக நான்காவது தடவை இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 2016ல் நாட்டின் சிறந்த SME வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி தெரிவு செய்யப்பட்டது. 2017ல் சிறந்த பசுமை வங்கி மற்றும் சிறந்த தனியார் வங்கி ஆகிய விருதுகளையும் பெற்றுக் கொண்டது.

அதேபோல் 2018ல் சிறந்த உள்நாட்டு வங்கி மற்றும் சிறந்த SME வங்கி ஆகிய விருதுகளையும் வென்றுள்ளது.

இன்டர்நேஷனல் பினான்ஸ் ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வரையறுக்கப்பட்ட சர்வதேச பினான்ஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தால் வெளியிடப்படும் முன்னணி நிதி மற்றும் வர்த்தக மதிப்பீட்டு சஞ்சிகையாகும். வளர்ந்து வரும் சந்தைகள் மீது கவனம் செலுத்தும் இந்த சஞ்சிகை சர்வதேச நிதி தொடர்பான செய்திகள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் என துறைசார் நிபுணர்கள் பலரின் கருத்துக்களைத் தாங்கி வெளிவருகின்றது.