Back to Top

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கையளித்த கொமர்ஷல் வங்கி

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கையளித்த கொமர்ஷல் வங்கி

February 14, 2020  04:50 pm

Bookmark and Share
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கொமர்ஷல் வங்கியின் மட்டக்களப்பு கிளையின் ஒத்துழைப்புடன் உதவிகள் கையளிக்கப்பட்டன.

மண்ணென்னெய் அடுப்புக்கள், சமையலறை உபகரணங்கள் என்பன மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இது தவிர படுக்கை மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புக்கள், தலையணை உறைகள் என்பனவும் தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டன.

வெள்ளத்தின் மூலம் தமது அன்றாட பாவனைப் பொருள்களில் பெரும்பாலானவற்றை இழந்த மக்களுக்கு தமது வாழ்வை மீளக் கட்டி எழுப்பும் வகையில் அவற்றைமீள வழங்குவதில் கவனம் செலுத்தியே இந்த உதவிகள் வழங்கப்பட்டன. இலங்கை இராணுவத்தின் 23வது படைஅணியின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசுந்தர மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம். உதயகுமார், இடர்முகாமைத்துவ நிலையத்தின் ரன்தீர்துடுகல ஆகியோர் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நிவாரணங்களைக் கையளிப்பதில் பூரண ஆதரவு வழங்கினர் என வங்கி அறிவித்துள்ளது.