Back to Top

கொமர்ஷல் வங்கியின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்து சமய நிகழ்ச்சி

கொமர்ஷல் வங்கியின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற இந்து சமய நிகழ்ச்சி

February 14, 2020  04:56 pm

Bookmark and Share
கொமர்ஷல் வங்கியின் 100 ஆண்டு கால சேவை நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்றாக இந்து சமய நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

நாட்டுக்கும் கொமர்ஷல் வங்கிக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் தெய்வ ஆசி வேண்டி மருதானை ஸ்ரீ கைலாசநாதர் தேவஸ்தானத்தில் அபிஷேக பூஜைகள் உட்பட இந்த சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வங்கியின் தலைவர் தர்மாதீரசிங்க, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். ரெங்கநாதன், பிரதம செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க, ஏனைய பணிப்பாளர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முன்னாள் இந்நாள் ஊழியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு ஏற்கனவே 4000 த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஒன்று கூடல் மற்றும் பௌத்த, கிறிஸ்தவ சமய நிகழ்ச்சிகள் என்பன கொமர்ஷல் வங்கியின் நூற்றாண்டை முன்னிட்டும் அதன் முன்னோடிகளை நினைவு கூறும் வகையிலும் இடம் பெற்றுள்ளன.

பங்குதாரர்களைப் பாராட்டும் நிகழ்வு, 100 பாடசாலைகளுக்கு நன்மை அளிக்கும் வகையிலான நாடு தழுவிய சமூகநல மேம்பாட்டுத் திட்டங்கள், பாரிய அளவிலான காடு வளர்ப்புத் திட்டம் என்பன 2020ம் ஆண்டு கலண்டரில் வங்கியின் நூற்றாண்டை முன்னிட்டு அமுல் செய்யப்பட உள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.