Back to Top

Ad

 உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

உதயங்க வீரதுங்கவுக்கு பெப். 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

February 14, 2020  06:45 pm

Bookmark and Share
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 அளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த யு.எல் - 208 என்ற இலக்கமுடைய விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

(பின்னிணைப்பு - 6.59 pm) இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பெப்ரவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Most Viewed