
இன்று இரவு வௌியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்
February 14, 2020 09:32 pm
தேசிய சம்பளக் கொள்கையை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வௌியிடப்படவுள்ளது.
தேசிய சம்பளக் கொள்கையை அமுல்ப்படுத்துவதற்காகவும் மற்றும் செயற்படுத்தவும் அரசியலமைப்பின் 33 ஆவது சரத்தின் படி ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.