Back to Top

 இன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

இன்று முற்பகல் இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

February 20, 2020  09:24 am

Bookmark and Share
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று (20) முற்பகல் இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் பாராளுமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள தொலைப்பேசி உரையாடல் குரல்பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இம்மாதத்திற்கான இறுதி பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்று முற்பகல் ஆளுங்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கங்களை பெற்றுக் கொள்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தின் பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ள நிலையில் 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்திற்கு அமைய மார்ச் மாதம் 02 ஆம் திகதியின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெறுவார்.

அதன்படி, ஜனாதிபதியால் எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின், எட்டாவது பாராளுமன்றின் இறுதி அமர்வு இன்றுடன் நிறைவடையக்கூடும்.

Most Viewed