Back to Top

COVID-19 க்கு எதிராக போராடுவதற்கு ஆர்பிகோ இன்சூரன்ஸ் நடவடிக்கை

COVID-19 க்கு எதிராக போராடுவதற்கு ஆர்பிகோ இன்சூரன்ஸ் நடவடிக்கை

March 20, 2020  10:53 am

Bookmark and Share
உலகின் பல நாடுகள் கொரோனாவைரஸ் (COVID-19) பரவல் காரணமாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான நிலையை போன்று, இலங்கையிலும் பல சவால்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, அண்மையில் இந்த நோய் பரவல் தொடர்பில் எழும் சகல நஷ்டஈடு கோரல்களையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பரவும் தொற்றுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகள் தொடர்பில் சாதாரணமாக காப்புறுதி நிறுவனங்கள் காப்பீடுகளை வழங்காத போதிலும், இது போன்றதொரு நெருக்கடியான சூழலில், ஒவ்வொரு நபரினதும் நலன் மற்றும் சுகாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது தனது பொறுப்பாக ஆர்பிகோ இன்சூரன்ஸ் கருதுகின்றது. நிறுவனத்தின் உறுதியான மீள் காப்புறுதி பின்புலத்தினூடாக, இந்த துரித தீர்மானத்தை மேற்கொள்ள முடிந்ததுடன், குழுமத்தின் தலைவர் கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் தொலைநோக்கமான, அனைத்து இலங்கையர்களுக்கும் இடர் நிறைந்த வேளையில் சேவைகளை வழங்குவது என்பதற்கமைய இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியான ஹர்ஷ டி அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், ´நாம் அனைவரும் எதிர்பாராத ஒரு நிலைமைக்கு ஆளாகியுள்ளோம். இந்த கொரோனாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாம் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதுடன், அதனால் நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியும் சிந்திக்கின்றோம். இலங்கை அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகார அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். சமூகமாக உறுதியாக முன்னேறுவதற்கு அனைவரையும் இந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு நாம் அனைவரிடமும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.´ என்றார்.

ஹரஷ் மேலும் தெரிவிக்கையில், ´நீங்கள் உங்களினதும் உங்களைச் சூழவுள்ள அனைவரினதும் உள மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றீர்கள் என நாம் கருதுகின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் நாம் புரிந்துணர்வுடன், பொறுமையாக மற்றும் சாமர்த்தியமாக செயலாற்ற வேண்டும்.´ என்றார்.

குளோபல் பிரான்ட்ஸ் சஞ்சிகையினால் 2019 ஆம் ஆண்டில் ´இலங்கையின் மிகவும் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி நிறுவனம்´ எனும் கௌரவிப்பை பெற்றதுடன், ICC இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2019 ஆசியா காப்புறுதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் இடர் முகாமைத்துவ மூலோபாயத்துக்கான விசேட கௌரவிப்பையும் பெற்றிருந்தது. இந்த வருடத்தில், நாட்டின் ஆறு மூலோபாய பகுதிகளுக்கு தனது பிரசன்னத்தை வியாபித்திருந்ததுடன், ஜனவரி மாதத்தில், குழுமத்தின் ஆயுள் வருமானத்தை தவிர்த்து அதியுயர் மாதாந்த விற்பனையை பதிவு செய்திருந்தது.

2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, இலங்கையின் முன்னணி காப்புறுதி சேவைகள் வழங்குநராக ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் குறைந்த காலப்பகுதியில் வளர்ச்சியடைந்துள்ளது. தனது தாய் நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் பெறுமதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றி இயங்குவதுடன், ஆயுள் காப்புறுதி தேவைகளை நிவர்த்தி செய்ய நம்பிக்கை வாய்ந்த மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் வழங்குநராக திகழ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Most Viewed