Back to Top

கிரிஸ்ப்ரோ சிறிய கோழிப்பண்ணை உரிமையாளர்களை பலப்படுத்துவதற்காக விவசாய அமைச்சுடன் இணைகிறது

கிரிஸ்ப்ரோ சிறிய கோழிப்பண்ணை உரிமையாளர்களை பலப்படுத்துவதற்காக விவசாய அமைச்சுடன் இணைகிறது

March 20, 2020  07:01 pm

Bookmark and Share
இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி உற்பத்தி செய்யும் கிரிஸ்ப்ரோ நிறுவனம், விவசாய, பெருந்தோட்ட, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சிறிய கோழிப் பண்ணை சமூகத்தினரை பலப்படுத்தும் வகையில் சிறியளவிலான விவசாய வர்த்தக ஒத்துழைப்பு (ASPP) வேலைத் திட்டத்துடன் இணைந்து மகியங்கனையை அண்டியுள்ள பிரதேச கோழிப் பண்ணையாளர்களை மேம்படுத்தும் வேலைத் திட்டமொன்றை அண்மையில் முன்னெடுத்தது. புதிய கோழிப்பண்ணையாளர்களை மேம்படுத்தல் மற்றும் தற்போது சிறிய அளவிலான கோழிப் பண்ணைகளை நடத்திச் செல்லும் பண்ணையாளர்களுக்கு வளங்களைப் பெற்றுக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்துவது போன்றவையே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். சர்வதேச முதலீட்டுடன் விவசாய அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தில் கிரிஸ்ப்ரோ நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் சிறிய அளவிலான கோழிப் பண்ணையாளர்கள் 100 பேர் நன்மையடைந்துள்ளனர்.

சிறிய அளவிலான விவசாய தொழில் ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இயங்கும் ´தருண திரிய´ கடன் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான கோழி பண்ணையாளர்களுக்காக விவசாய அமைச்சினால் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் இந்த நிதியில் 70% நிவாரண வட்டியாக பண்ணையாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் மிகுதி 30% நிதியை பண்ணையாளர் தமது உழைப்பின் மூலம் வேலைத் திட்டத்திற்கு கொடுக்க வேண்டியுள்ளது. முதலில் இந்த கடன் தொகையின் மூலம் கோழிப் பண்ணையொன்று புதிதாக ஆரம்பிக்க அல்லது தற்போதுள்ள பண்ணையை விஸ்தரிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டுவதுடன் இந்த கடன் தொகையை முழுமையாக பண்ணை வேலைகளுக்காகவே பயன்படுத்த வேண்டும். கோழிப் பண்ணையை உருவாக்குவதற்காக கம்பி வலைகள், கூரைத் தகடுகள், வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கருவி போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்த முடியும்.

இதற்கு முன்னர் கிரிஸ்ப்ரோவுடன் இணைந்திருந்த சிறியளவிலான பண்ணை உரிமையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகளுக்கான உணவு மற்றும் நீர்வசதிகளை வழங்கும் நிறுவனங்களினால் வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டபோதிலும் தேவையான அடிப்படை வசதிகள் அனேகருக்கு தாங்கிக்கொள்ள முடியாமல் போனது. விவசாய அமைச்சினால் சிறிய விவசாய வர்த்தக ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் மூலம் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சவால்களை வென்றெடுப்பதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன் கோழிப்பண்ணை தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியும். இந்த வேலைத் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும் நிதிக்கு 6.5% மிகக் குறைந்த வட்டி விகிதம் அறவிடப்படுவதுடன் DFCC வங்கி ஊடாக கடன் வசதிகளை விவசாயிகளுக்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த வேலைத் திட்டம் தொடர்பாக பிராந்திய அதிகாரியிடம் அல்லது கிரிஸ்ப்ரோ பிரதேச அலுவலகத்தில் மேலதிக விபரங்களைத் தெரிவித்துகொள்ள முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்ப்ரோ வர்த்தக பிரிவு பிரதானி (ஊகா/கிழக்கு) சுமித் அமேசிங்க, ´சுயதொழிலாக கோழி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டு தோறும் பெரும்பாலானோர் எம்மிடம் கோரிக்கை விடுகின்றனர். எனினும் அவர்கள் மத்தியில் கட்டிடம் தொடர்பாக அடிப்படை மூலதனத்தை போடக் கூடியவர்கள் 10% மானவர்களே. இந்த வேலைத் திட்டம் ஊடாக அத்தகைய புதிய விவசாய சந்ததியொன்றை உருவாக்க முடிவதுடன் கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக பாரிய ஒத்துழைப்பும் கிட்டும். கோழிப் பண்ணைத் தொழிலில் இலங்கையில் முதலாவது இடத்திலுள்ள நிறுவனமாக கிராமிய வறுமையை குறைப்பதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளதுடன் அதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடிய சிறந்த பங்குதாரராக ஆவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பாக்கியமாகக் கருதுகிறோம்.´ என தெரிவித்தார்.

1972 ஆம் ஆண்டு 100 கோழி குஞ்சுகளுடன் ஆரம்பமான கிறிஸ்ப்றோ அன்று முதலே சந்தையில் முன்னணியாக செயற்படுகின்றது. தரம், புத்துணர்வு மற்றும் நவீனமயத்துக்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து இலங்கையின் முன்னணி கோழி உற்பத்தி வர்த்தக நாமமாக முன்னேறியது. இலங்கையில் முதற்தடவையாக அதிநவீன இயந்திரங்களின் பாவனையுடன் முழுமையான கணினி மயப்படுத்தப்பட்டு (vertically- integrated) தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. தாய் பண்ணை, குஞ்சு பொரிப்பக பண்ணை, புரொய்லர் பண்ணை மற்றும் கோழி உணவு உற்பத்தி மண்டபம் உட்பட படர்ந்து விரிந்த இடத்தை கிறிஸ்ப்றோ கொண்டுள்ளது. ´பண்ணையிலிருந்து கரண்டி வரை´ (Farm to Fork) என்ற எண்ணமே நிறுவனத்தின் தாரக மந்திரமாகும். கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் வெற்றிக்கு வெளி கோழி உற்பத்தியளார்கள், சோளம் உற்பத்தியாளர்கள் போன்று இலங்கை வாடிக்கையாளர்களும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed