Back to Top

கனிகாக்கு கொரோனா - ஜனாதிபதி மாளிகையில் படர்ந்த அச்சம்!

கனிகாக்கு கொரோனா - ஜனாதிபதி மாளிகையில் படர்ந்த அச்சம்!

March 21, 2020  09:03 am

Bookmark and Share
வெள்ளிக்கிழமை அன்று லக்னோவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பாலிவுட் பாடகி கனிகா கபூரும் ஒருவர். இதை கனிகா கபூர் தன்னுடைய சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தார். மார்ச் மாதம் கனிகா லண்டனில் இருந்து இந்தியா வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மூன்று பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இப்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனிகா கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் எம்.பி துஷ்யந்தும் கலந்து கொண்டார். இவர் பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல், இவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டுள்ளார்.

ராம்நாத் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் கை குலுக்கவில்லை என்றாலும், அவருக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Most Viewed