Back to Top

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு

April 5, 2020  05:47 pm

Bookmark and Share
நாட்டில் மேலும் 3 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக தாெற்று நாேய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் 170 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளனர்.

தற்போதைய நிலையில் 138 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் அறிகுறிகளுடன் 250க்கும் அதிகமானோர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.