Back to Top

கொவிட்-19க்கு முன்னரான அடைவுகளோடு 2020ஆம் ஆண்டை நிதானமாக ஆரம்பித்தது கொமர்ஷல் வங்கி

கொவிட்-19க்கு முன்னரான அடைவுகளோடு 2020ஆம் ஆண்டை நிதானமாக ஆரம்பித்தது கொமர்ஷல் வங்கி

May 20, 2020  10:05 am

Bookmark and Share
கொவிட்-19 பரவல் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட மந்த நிலைக்கு முன்னராகக் காணப்பட்ட வணிகச் செயற்பாட்டு அளவில் ஏற்பட்ட ஆரோக்கியமான வளர்ச்சி ஏனைய வருமானங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அபாரமான பங்களிப்பு ஆகியன கொமர்ஷல் வங்கி 2020ஆம் ஆண்டை நிதானமான வளர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவியுள்ளன. முன்னைய காலாண்டுடன் ஒப்பிடும்போது அடுத்த காலாண்டுக்கான வலுக்குறைக் கட்டணங்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கும் சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்த நிதானமான ஆரம்பம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தனியார் வங்கிகளில் முதன்மை வங்கியான கொமர்ஷல் வங்கி 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி நிறைவடைந்த மூன்று மாதங்களில் 12.87 சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்திரூபவ் மொத்த வருமானமாக 39.444 பில்லியன் ரூபாயைப் பதிவுசெய்தது. வட்டி வருமான வளர்ச்சியானது எதிர்பார்க்கப்பட்டதைப் போல் மந்தமாகவே காணப்பட்டு வெறுமனே 0.83 சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்தி 31.892 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. ஆனால் வங்கியின் வட்டிச் செலவுகள் 19.466 பில்லியனாகக் காணப்பட்டு 1.43 சதவீதம் என்ற குறைப்பை மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டில் வெளிப்படுத்தியது. சரியான நேரத்தில் பொறுப்புகளின் மீள்விலைப்படுத்தல் CASA வீதத்தில் முன்னேற்றம் ஆகியன இக்குறைப்புக்கு உதவியிருந்தன. இதன்மூலமாக நிகர வட்டி வருமானமாக 12.426 பில்லியன் ரூபாய் என்ற 4.59 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்த வங்கிக்கு இயலுமாக அமைந்திருந்தது.

மீளாய்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களில் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 4.34 சதவீதத்தால் சரிவடைந்திருந்தது. 2019ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் அதன் மதிப்பு 4.27 சதவீதத்தால் உயர்வடைந்திருந்தது. இச்சரிவோடு சேர்த்து வங்கியின் வெளிநாட்டு நாணயச் சொத்துகளும் பொறுப்புகளும் மீள்கணிப்பீடு செய்யப்பட்டதன் காரணமாக பரிமாற்ற இலாபமாக 6.514 பில்லியன் ரூபாயை வங்கி பதிவுசெய்தது. இதன் காரணமாக 2019ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் ஏனைய செயற்பாட்டு வருமானமாக 389.309 ரூபாய் இழப்புக் காணப்பட்ட நிலையில் இந்தப் பரிமாற்று இலாபம் மூலமாக அது நிகர வருமானத்தை 6.587 பில்லியன் ரூபாயாக மாற்றியது. அதேநேரத்தில் மீளாய்வு செய்யப்பட்ட காலத்தில் கொடுக்கல் - வாங்கல்கள் மூலமாக முன்னகர்த்தப்பட்ட வெளிநாட்டுப் பரிமாற்ற ஒப்பந்தங்களில் வரவு ஆகாத இழப்புகள் வங்கியில் பதிவுசெய்யப்பட்டதன் காரணமாக 2.348 பில்லியன் ரூபாய் இழப்புப் பதிவானது. இதனால் வங்கியின் ஏனைய வருமானமானது 2019ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் பதிவான 460 மில்லியன் ரூபாயிலிருந்து பத்து மடங்கு அதிகரித்து மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டில் 4.600 பில்லியன் ரூபாயாகப் பதிவானது.

அதிகரித்துவரும் செயற்படாநிலைக் கடன்கள் காணப்படும் வங்கித் தொழிற்றுறையில் வலுக்குறைக் கட்டணங்களுக்காகக் கணிசமானளவு அதிகரித்த ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காரணமாக மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டில் 6.545 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டை வங்கி மேற்கொண்டிருந்தது. இதற்கு முன்னைய மூன்று காலாண்டுகளில் வங்கி முறையே 2.738 பில்லியன் ரூபாய் 2.956 பில்லியன் ரூபாய் 3.515 பில்லியன் ரூபாய் ஆகிய தொகைகளையே வலுக்குறைக் கட்டணங்களுக்காகவும் ஏனைய இழப்புகளுக்காகவும் ஒதுக்கியிருந்தது.

கட்டுப்படுத்தக்கூடிய செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ச்சியான கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக இம்மூன்று மாதங்களில் வங்கி தனது மொத்தச் செலவீனத்தை 6.536 பில்லியன் ரூபாயாகக் கொண்டிருந்தது. இதற்கு முன்னைய ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது இது வெறுமனே 254 மில்லியன் ரூபாய் அல்லது 4.04 சதவீதம் என்ற அதிகரிப்பே ஆகும்.

வரிகளுக்கு முன்னராக செயற்பாட்டு இலாபமானது 6.239 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டதோடு இது 4.63 சதவீதம் என்ற வீழ்ச்சியைக் காண்பித்தது. ஆனால் டிசெம்பர் 2019 இலிருந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (NBT) இல்லாமல் செய்யப்பட்டதன் காரணமாகவும் ஜனவரி 2020 இலிருந்து கடன் மீள்செலுத்துதல் தீர்வை (DRL) இல்லாமல் செய்யப்பட்டதன் காரணமாகவும்ரூபவ் மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிதியியல் சேவைகளுக்கான வரிகள் 42.83 சதவீதத்தால் குறைவடைந்து 1.010 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. எனவே வருமான வரிக்கு முன்னரான இலாபமாக இக்குறித்த மூன்று மாதங்களில் 5.229 பில்லியன் ரூபாய் பதிவானது. இது 9.51 சதவீத அதிகரிப்பாகும்.

2019ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வு செய்யப்பட்ட காலத்துக்கான வருமானத்தில் வரி விலக்களிப்பட்ட அங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக வரிக்குப் பின்னரான இலாபம் 22.62 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துரூபவ் 3.707 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது.

மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டுக்கான வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. தர்ம தீரசிங்க கொவிட்-19 பரவல் தொற்றின் காரணமாக வணிகங்கள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் இன்னமும் வங்கியின் செயற்பாடுகளில் பதிவாகியிருக்கவில்லை. ஏனெனில் மார்ச் மாத நடுப்பகுதி வரை கிட்டத்தட்ட வழக்கமான அளவு செயற்பாடுகளை நாம் கொண்டிருந்தோம். ஆனால் சில வணிகத் துறைகளுக்கு மோசமான நிலை ஏற்படும் நிலைமையை நாம் எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தது. அதன் விளைவாக இக்காலாண்டுப் பகுதியில் வலுக்குறைக் கட்டணங்களுக்கான ஒதுக்கீடு ஒரு காலாண்டில் ஒதுக்கப்பட்டதில் மிக அதிகமான தொகையை அடைந்திருந்தது. கொவிட்-19 க்குப் பின்னரான மீட்சிக் காலத்தில் இவ்வொதுக்கீடானது வங்கிக்கான சுமையைக் கூட்டும் எனத் தெரிவித்தார்.

மீளாய்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களில் ஆரோக்கியமான வைப்புத் திரட்டலை வங்கி பதிவுசெய்திருந்தாலும் கடந்தாண்டு முடிவோடு ஒப்பிடும் போது வங்கியின் CASA வீதத்தை 37.10 சதவீதத்திலிருந்து 39.81 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் வெளிப்படுத்தினார். கொவிட்-19 பரவல் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆராய்வதில் வங்கி தற்போது ஈடுபட்டுவருகிறது எனத் தெரிவித்த அவர் அதேநேரத்தில் இந்தப் பரவல் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாகக் காணப்பட்ட பல்வேறான சவால்களுக்கு மத்தியிலும் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்குவதற்காக அனைத்து மட்டத்திலுமுள்ள வங்கியின் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார். வங்கியானது மிக விரைவாக மாற்றங்களை மேற்கொண்டு பாதுகாப்பானதும் சௌகரியமானதுமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு இந்நெருக்கடிக் காலத்தில் பல் வழிகளில் வழங்கியிருந்தது என திரு. ரெங்கநாதன் தெரிவித்தார்.

இந்த ஊரடங்கின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு எங்களால் இயன்றதை நாம் மேற்கொண்டிருந்தோம். தேவைப்படின் இன்னமும் சிறப்பாக எதிர்காலத்தில் செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். வங்கியின் மொத்தச் சொத்துகள் 63.919 பில்லியன் ரூபாயால் அல்லது 4.61 சதவீதத்தால் மாத சராசரியாக 21.3 பில்லியன் ரூபாயால் அதிகரித்து 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி 1.451 ட்ரில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. இதற்கு முன்னைய 12 மாதகாலப் பகுதியில் சொத்துகளின் வளர்ச்சி 132.665 பில்லியன் ரூபாயாக அல்லது ஆண்டிலிருந்து ஆண்டுக்கான வளர்ச்சியாக 10.06 சதவீதம் காணப்பட்டது.

மொத்தக் கடன்களும் முற்பணங்களும் 28.744 பில்லியன் ரூபாயால் அல்லது 3.12 சதவீதத்தால் 2019ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து அதிகரித்து 949.201 பில்லியன் ரூபாயாக மீளாய்வு செய்யப்பட்ட மூன்று மாதங்களின் முடிவில் காணப்பட்டது. இதற்கு முன்னைய ஆண்டில் எடுக்கப்பட்ட கடன் தொகை 64.562 பில்லியன் ரூபாயாக இருந்து ஆண்டிலிருந்து ஆண்டுக்கான வளர்ச்சியாக 7.30 சதவீதம் பதிவானது.

மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வைப்புகள் 4.87 சதவீத்தால் அல்லது 51.326 பில்லியன் ரூபாயால் அதிகரித்து 1.105 ட்ரில்லியன் ரூபாயாக 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி காணப்பட்டது. இது சராசரி மாதாந்த வளர்ச்சியாக 17 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகக் காணப்பட்டது. 2019ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியிலிருந்தான வைப்பு வளர்ச்சி 98.557 பில்லியன் ரூபாயாக அல்லது 9.80 சதவீதமாகக் காணப்பட்டு மாதாந்தச் சராசரியாக 8.2 பில்லியன் ரூபாய் காணப்பட்டது.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. வங்கியானது தனது 100ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. 2019ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட சர்வதேச உள்நாட்டு விருதுகளை வென்றிருந்த வங்கி இலங்கையில் 268 கிளைகளையும் 865 ஏ.டி.எம்-களையும் கொண்டுள்ளது.

முழுமையான வசதிகளைக் கொண்ட பெரும்பான்மைப் பங்குடைமைப் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் கொண்டிருப்பதற்கு மேலதிகமாகரூபவ் பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண்நிதி நிறுவனமுமென மியான்மாரிலும் கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.