Back to Top

விசா நிறுவனத்துடன் இணைந்து சைபர்சோர்ஸ் ஐ.பி.ஜி தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது கொமர்ஷல் வங்கி

விசா நிறுவனத்துடன் இணைந்து சைபர்சோர்ஸ் ஐ.பி.ஜி தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது கொமர்ஷல் வங்கி

May 22, 2020  08:35 am

Bookmark and Share
இலங்கையில் கொடுப்பனவு கார்ட்களை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமான கொமர்ஷல் வங்கி பூகோள ரீதியில் கொடுப்பனவுத் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் விசா நிறுவனத்துடன் புதிய பங்காண்மையொன்றை அறிவித்துள்ளது. இப்பங்காண்மை மூலமாக சைபர்சோர்ஸ் (CyberSource) என்ற பூகோள கொடுப்பனவு முகாமைத்துவக் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுகளை எதிர்பார்க்கும் எந்தவொரு வணிக நிறுவனத்துக்கும் பல வகையிலான கொடுப்பனவுச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் ஒன்றாக இது அமையவுள்ளது.

கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கான ஒரே தொழில்நுட்பத் தீர்வை விசா நிறுவனம் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு சைபர்சோர்ஸ் வழிவகுக்கிறது. அனைத்து அளவிலான வணிக நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதையும் கொடுக்கல் - வாங்கல்களில் ஈடுபடுவதையும் முன்னேற்றுவதோடு மோசடிகளையும் பாதுகாப்பு இடர்களையும் தணிப்பதோடு செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மாற்றமடைந்துவரும் வணிகத் தேவைகளுக்கேற்ப பொருத்தமாக மாறிக்கொள்வதற்கும் முடியும். கொடுப்பனவுத் திட்டங்களுக்குத் தேவைப்படும் கொடுப்பனவு அட்டைத் தொழிற்றுறைத் தரவுப் பாதுகாப்பு நியமம் (Payment Card Industry Data Security Standard - PCI-DSS) சான்றிதழ் இரகசியமான கொடுப்பனவுத் தரவுகளைப் பாதுகாப்பதோடு இலத்திரனியல் வர்த்தக மோடிகளுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்கும் 3D Secure உறுதியளிப்பையும் இது கொண்டுள்ளது.

சைபர்சோர்ஸ் தீர்வை கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்துவதைத் தொடர்ந்து இத்தீர்வைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து இலத்திரனியல் வர்த்தகத் தளங்கள் ஊடாகக் கொடுப்பனவுகளைப் பெற முடியும். இந்த ஒருங்கிணைப்புச் செயற்பாடானது வணிக நிறுவனங்கள் வங்கியுடன் இணைந்து செயற்பட்டுரூபவ் அதன்மூலமாக சைபர்சோர்ஸ் சேவையைத் தமது இணையத்தளத்துடன் தொடர்புபடுத்துவதன் மூலமாக விசா மாஸ்டர்கார்ட் கார்ட் கொடுப்பனவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இது தொடடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமான விசா நிறுவனத்தின் முகாமையாளர் அந்தனி வொட்சன் இலங்கையானது தனது டிஜிட்டல் பயணத்தைத் தொடர்ந்துவரும் நிலையில் நாடு முழுவதிலும் அலைபேசி இணையத் தொடர்பு வசதிகள் விரிவடைந்து இலத்திரனியல் வர்த்தகமும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. சைபர்சோர்ஸ் மூலமாக கொமர்ஷல் வங்கிக்குப் பாதுகாப்பான கொடுப்பனவு நுழைவாயில் (gateway) சேவையொன்றை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வாறான பங்காண்மைகள் மூலமாக தொழிற்றுறையின் முன்னணி வகிக்கும் கொடுப்பனவுச் சேவைகள் ஊடாக இலங்கையைத் தொடர்ச்சியாக மேலும் பலப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

விசா நிறுவனத்தின் இந்தியாவுக்கும் தெற்காசியாவுக்குமான வியாபாரங்களை உள்வாங்குவதற்கும் சைபர்சோர்ஸுக்குமான தலைவர் ஷைலேஷ் போல் கருத்துத் தெரிவிக்கும் போது சைபர்சோர்ஸ் என்பது பாதுகாப்பான டிஜிட்டல் வர்த்தக அனுபவத்தைத் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வியாபார நிறுவனங்களால் சர்வதேச ரீதியில் நம்பப்படும் கம்பீரமான கொடுப்பனவுத் தீர்வாகும். இத்தீர்வை பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வாகவும் இலங்கையின் இலத்திரனியல் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்காகவும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் இணைவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று குறிப்பிட்டார்.

சைபர்சோர்ஸ் அறிமுகப்படுத்தப்படுதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. சனத் மனதுங்கரூபவ் இலத்திரனியல் வர்த்தகத்தின் வெற்றியென்பது வணிகர் வாடிக்கையாளர் என இருவரினதும் ஒட்டுமொத்த அனுபவத்தால் வழிநடத்தப்படுகிறது. இந்த அனுபவமென்பது பாதுகாப்பு இலகுவான பயன்பாடு ஆகியவற்றால் பிரதானமாகத் தீர்மானிக்கப்படுகிறது. சைபர்சோர்ஸ் மூலமாக அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்படுகின்றன என்றார்.

கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தலுக்கான பிரதிப் பொது முகாமையாளர் திரு. ஹஸ்ரத் முனசிங்க இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது கொவிட்-19 பரவல் தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் முடக்க நிலைக்கு மத்தியில் இலத்திரனியல் வர்த்தகத் தீர்வுகள் தொடர்பாக அதிகரித்த கவனம் எழுந்துள்ள நிலையில் சைபர்சோர்ஸின் அறிமுகமென்பது இதைவிடப் பொருத்தமான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. இலத்திரனியல் வர்த்தகத்தின் சௌகரியத்தன்மையை மக்கள் அதிகமாக உணரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரும் அதிகளவிலான கொடுக்கல் - வாங்கல்கள் தொடருமென நாம் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டார்.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. வங்கியானது தனது 100ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. 2019ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட சர்வதேச உள்நாட்டு விருதுகளை வென்றிருந்த வங்கி இலங்கையில் 268 கிளைகளையும் 865 ஏ.டி.எம்-களையும் கொண்டுள்ளது.

முழுமையான வசதிகளைக் கொண்ட பெரும்பான்மைப் பங்குடைமைப் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் கொண்டிருப்பதற்கு மேலதிகமாக பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண்நிதி நிறுவனமுமென மியான்மாரிலும் கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.