Back to Top

கொவிட்-19 நெருக்கடிக்கான உடனடித் துலங்கலாக ComBank ஆனது கடன் வட்டி வீதங்களைக் குறைக்கின்றது

கொவிட்-19 நெருக்கடிக்கான உடனடித் துலங்கலாக ComBank ஆனது கடன் வட்டி வீதங்களைக் குறைக்கின்றது

May 23, 2020  08:29 am

Bookmark and Share
தனிநபர் மற்றும் பெறுநிறுவன கடன் வாங்குபவர்களின் தற்போதைய தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் இலங்கையில் வட்டி வீதங்களின் கீழ்நோக்கிய போக்குக்கு ஏற்பவும் கொமர்ஷல் பேங்க் ஒஃப் சிலோன் ஆனதுரூபவ் அனைத்துப் பகுதிகளிலும் கடன் வீதங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது.

வீதக் குறைப்பானது இலங்கையின் முக்கிய தனியார் துறை வங்கியால் வழங்கப்படும் அனைத்து வகையான புதிய கடன்களையும் உள்ளடக்கியதாகும். மேலும் அடகு வைத்தல் குத்தகை மற்றும் மிகைப்பற்று என்பவற்றையும் இது உள்ளடக்கும்.

வீதக் குறைப்புக்களானவை வியாபாரங்களின் நிறுத்தம் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் வருமான இழப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

´தொற்றுநோயின் பாதகமான விளைவுகளிலிருந்து யாரும் பாதுகாப்புப் பெறவில்லை. பெரும்பாலும் அனைத்து வாடிக்கையாளர் பிரிவும் வியாபாரங்களின் அனைத்துத் துறைகளும் நிவாரணம் கோரி நிற்கின்றன. என்று கொமர்ஷல் வங்கியின் நிர்வாகப் பணிப்பாளர் திரு எஸ். ரெங்கநாதன் தெரிவித்தார். ´வங்கித் துறையும் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் இச்சந்தர்ப்பத்திற்கு சிறந்த முறையில் பதிலளிப்பதற்காகவும் வாடிக்கையாளர்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் மீதான சுமையை குறைக்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த வீதக் குறைப்பானது வியாபாரங்களை புதுப்பிக்கவும் இந்த சவாலான காலங்களில் தனிநபர்கள் மீதான சுமையை எளிதாக்கவும் கொமர்ஷல் வங்கி எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றாகும். ´

வீதக் குறைப்புக்களை விவரிக்கும் கொமர்ஷல் வங்கியானது விவசாய வியாபாரக் கடன்களுக்கான வீதங்களானவை ஐந்து மற்றும் ஏழு வருட கடன்களுக்கு பொருந்தக்கூடிய வீதங்கள் முறையே 12% மற்றும் 13% ஆகக் குறையும் வகையில்ரூபவ் 2% ஆல் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கும் நுண் நிறுவனங்களுக்குமான ´திரிபல´ கடன்களுக்கான வீதமானது ஐந்து மற்றும் ஏழு வருட குத்தகைதாரர்களுக்கு முறையே 11.5% மற்றும் 12.5% ஆகக் குறையும் வகையில் 2% ஆல் குறைக்கப்பட்டுள்ளன.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி வீதம் 10 வருட கடன்களுக்கு 1.5% ஆலும் 10 வருடங்களுக்கு மேற்பட்டவற்றுக்கு 1% ஆலும் குறைக்கப்பட்டு வீதங்கள் முறையே ஓராண்டிற்கு 11% மற்றும் 12% ஆகக் குறைக்கப்பட்டு கடன் வாங்குபவர்களின் ஒரு முக்கிய பிரிவின் மீதான அழுத்தம் தணிக்கப்படுகின்றது என்று கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது.

குத்தகைரூபவ் வியாபாரக் கடன் (Biz Loan) மற்றும் தனிநபர் கடன் வாடிக்கையாளர்கள் தமக்குரிய வட்டி வீதங்களில் 1.5%, 5% மற்றும் 5% குறைப்பின் மூலம் பயனடைகிறார்கள்.

மிகைப் பற்றுக்களின் வீதம் ஆண்டுக்கு 12% வரை 2% ஆலும் ஏனைய நிலையான கடன்களுக்கு 11% வரை 1.5% ஆலும் குறைக்கப்பட்டுள்ளதாக கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது. இதேநேரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற்றுவதற்கும் மற்றும் ஏனைய சுற்றுச்சூழல் நேச நடைமுறைகளில் முதலீடு செய்வதற்கும் துணைபுரியும் பசுமைக் கடன்கள் (Green Loans) மற்றும் குத்தகைகளுக்கும் குறைந்த செலவே ஏற்படும். இவற்றுக்கு பொருந்தக்கூடிய வட்டி வீதங்கள் 1.5% வரை குறைக்கப்படும்.

அடகு வட்டி வீதத்தை ஓராண்டிற்கு 11% ஆகக் குறைப்பதற்கு வங்கி முன்னெடுப்புக்களை எடுத்துள்ளது. இது இலங்கை மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட 12% வீதத்தை விடக் குறைவானதாகும். கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட கடன்தாரர் வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிவாரணப் பொதியின்படி செயல்படாக் கடன்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு தொடர் சலுகைகளைரூபவ் ஏப்ரல் மாதத்தில் கொமர்ஷல் வங்கி அறிவித்தது. மேலும் கொமர்ஷல் வங்கியானது தனது கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிலுவைத் தொகைகளுக்கான ஒரு சிறப்பு அட்டை திருப்பிச் செலுத்தும் திட்டம் உட்பட பல சலுகைகளை வழங்கியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்திய விசேட பணி மூலதன கடன்களுக்கான விண்ணப்பங்களை கொமர்ஷல் வங்கி ஏற்கத் தொடங்கியுள்ளது. இது சுயதொழில் செய்பவர்களுக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் 4% வட்டி வீதத்தில் வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக உலகின் சிறந்த 1000 வங்கிகளில் இடம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரே வங்கியும் இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியும் கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி இந்த வருடம் தனது 100 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019 இல் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகளை வென்ற இவ்வங்கியானது இலங்கையில் 268 கிளைகளையும் 865 ATM (தன்னியக்க காசளிப்பு இயந்திரம்) களையும் கொண்ட ஒரு வலையமைப்பை இயக்குகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டு செயல்பாடுகள் பங்களாதேஷ் மியன்மார் மற்றும் மாலைத்தீவுகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. கொமர்ஷல் வங்கியானது பங்களாதேஷில் 19 கிளைகளை இயங்குகின்றது. மியன்மாரின் யங்கோனில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தையும் நைப்பியிதோவில் ஒரு நுண்நிதி கம்பனியையும் இயக்குகின்றது. அத்துடன் மாலைத்தீவுகளில் முழுமையாக விருத்தி செய்யப்பட்ட பெரும்பான்மைப் பங்குடனான ஒரு Tier I வங்கியும் கொமர்ஷல் வங்கிக்கு இருக்கின்றது.