Back to Top

நிசங்க சேனாதிபதி  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

நிசங்க சேனாதிபதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

May 23, 2020  11:17 am

Bookmark and Share
எவன் கார்ட் மெரிடைம் சர்விசர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10 மணிக்கு அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.

எவன்கார்ட் நிறுவனத்தை முறையற்ற விதத்தில் கையகப்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டம் குறித்து நிசாங்க சேனாதிபதியால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அமைச்சுக்களின் முன்னாள் செயலாளராக கடமையாற்றிய விக்டர் சமரவீர மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் பதில் செயலாளர் சமன் திசாநாயக்க ஆகியோர் செய்த முறைப்பாடுகள் தொடர்பிலும் 26 ஆம் திகதி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.