Back to Top

 மேலும் 8 பேருக்கு கொரோனா

மேலும் 8 பேருக்கு கொரோனா

May 31, 2020  06:00 pm

Bookmark and Share
இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்படையை சேர்ந்த ஒருவரும் மற்றும் ரஷ்யாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 7 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1628 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 20 பேர் இன்றைய தினம் (31) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 817 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Most Viewed