Back to Top

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்க மேலும் இருவருக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியம் வழங்க மேலும் இருவருக்கு அழைப்பு

June 1, 2020  10:05 am

Bookmark and Share
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க மேலும் இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குற்ற விசாரணை பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலபிட்டியவில் வசிக்கும் மொஹமட் ஜிப்ரி மொஹமட் உசைன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று (01) பிற்பகல் 12.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் மீண்டும் கடந்த மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடதக்கது.