Back to Top

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

June 4, 2020  06:47 am

Bookmark and Share
இலங்கையில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் 14 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1749 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 836 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 902 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Most Viewed