Back to Top

மொபிடெல்: 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பு Ookla®

மொபிடெல்: 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பு Ookla®

June 4, 2020  09:30 am

Bookmark and Share
இணைய சோதனை மற்றும் பகுப்பாய்வின் உலகளாவிய தலைவரான Ookla, 2019ஆம் ஆண்டுக்கான தமது வேகப் பரிசோதனை விருதின் (Speedtest AwardTM 2019) வெற்றியாளராக மொபிடெலினை அறிவித்தது. இதன் மூலம் மொபிடெல் இலங்கையில் மிக வேகமான மொபைல் வலையமைப்பினை கொண்டுள்ளமைக்காக தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளுக்கும் இவ்விருதினை வெற்றிகரமாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Speedtest விருதுகள் உலகெங்கிலும் உள்ள இணைய சேவை வழங்குனர்கள் மற்றும் மொபைல் இணைப்புச் சேவை வழங்குனர்களுக்கு உரிமம் பெற்றவை. அவை Ookla வால் தங்கள் சந்தைகளில் மிக வேகமாக இருக்கும் என்று தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கையின் விருது ஒரு வேக மதிப்பெண்ணைப் (Speed Score ™)பயன்படுத்தி தீர்மானிக்கப்பட்டது. இது வலையமைப்பு வேக செயற்திறனை தரவரிசைப்படுத்த ஒவ்வொரு சேவை வழங்குனர்களதும் பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேக அளவுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஏனைய போட்டியாளர்களை விட மேலதிகமாக மொபிடெலின் வேக மதிப்பெண் காணப்பட்டதோடு மற்றவர்களை விஞ்சி 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிக வேகமான மொபைல் வலையமைப்பாக மீண்டும் மகுடம் சூட்டிக்கொண்டது. இந்த Speedtest® க்கு பின்னாலிருக்கும் Ookla, புகழ் பெற்ற சுயாதீனமான இணைய சோதனைத் தளமாகும். இதனை ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உள்ள பல மில்லியன் கணக்கான நுகர்வோர் பயன்படுத்துகின்றனர்.

இலங்கையின் மொபைல் தொலைத்தொடர்பு பிரிவினை ஆக்கிரமித்திடும் மொபிடெலின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நளின் பெரேரா கருத்து தெரிவிக்கையில் ´இந்த விருதை வென்றதில் நாம் மிக மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் அனைத்து மொபைல் சேவை வழங்குனர்கள் மத்தியிலும் மொபிடெல் இலங்கையில் மிக உன்னதமான பயனர் அனுபவத்தினை வழங்குகின்றது என்பதனை இது சுயாதீனமாக உறுதிப்படுத்துகிறது.

Ookla ஒரு புகழ்பெற்ற சர்வதேச நிறுவனமாகும். இவ்விருது மொபிடெல் வலையமைப்பின் உன்னத தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆண்டு முழுவதும் விருதை வெல்வது என்பது உண்மையிலேயே ஒரு பெரும் வெற்றியாகும். மேலும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பயனர் அனுபவத்தினை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது. இது எங்கள் வலையமைப்பில் நாம் செய்த முதலீடுகளுக்கு ஒரு சிறந்த சான்றாகும். குறிப்பாக மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் தற்போதைய சூழ்நிலையில் மற்றும் தொடர்ந்தும் இணைப்பில் இருக்க வேண்டிய அவசியம் காணப்படுதல் போன்றவற்றால் மிகச்சிறந்த பயனர் அனுபவம் சிறந்த வேகம் மற்றும் தடையற்ற இணைப்பு என்பன இதன் சிறப்பம்சங்களாக காணப்படுகின்றன.´

4G LTE இனை மேம்படுத்துவதில் மொபிடெல்க்கு இருக்கும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பானது உன்னதமான பாவனையாளர் அனுபவத்தினை மேம்படுத்தியுள்ளது. இது high definition வீடியோ ஸ்டிரீமிங் Multimedia Online Gaming (MMOG) ஆகியவற்றை அனுபவித்து மகிழ்ந்திட உதவுகிறது. மொபிடெல் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் ப்ரோட்பாண்ட விரிவாக்கத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. மேலும் 5G யின் வணிக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நேரத்தில் அதற்காக தயார் நிலையில் இருக்கவும் 2020ஆம் ஆண்டிற்கான கூடுதல் முதலீடுகளை மேலும் விரிவுபடுத்தவும் ஆரம்பித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் முதலாவது மொபைல் 5G வலையமைப்பு சேவையை சோதனை செய்த மொபைல் சேவை வழங்குனர்கள் மொபிடெல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிக 5G ஸ்மார்ட்ஃபோனை தெற்காசிய பிராந்தியத்தில் 2019 ஜுன் 4 ஆம் திகதி முதன்முறையாக பயன்படுத்தியிருந்ததனூடாக மொபிடெல் தனது வேக ஆற்றலை மேலும் உறுதி செய்திருந்தது. அத்துடன் தெற்காசியாவில் 1.55Gbps எனும் புதிய வேக சாதனையையும் புரிந்துள்ளது. இது உலகளாவிய ரீதியில் 5G சேவையை நிறுவுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல்லாகவும் அமைந்துள்ளது.