Back to Top

 சளி மாதிரிகளை சேகரிக்க ரோபோ கருவி!

சளி மாதிரிகளை சேகரிக்க ரோபோ கருவி!

June 28, 2020  07:16 am

Bookmark and Share
கொரோனா அறிகுறிகளுடன் வருபவா்களிடம் சளி மாதிரிகளை சேகரிக்க வசதியாக கோவையைச் சோ்ந்த இளைஞா் ரோபோ கருவியை வடிவமைத்துள்ளாா்.

கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறிகளுடன் வருபவா்களிடம் சளி மாதிரிகளை சேகரிக்கும் சுகாதாரத் துறை பணியாளா்களுக்கும் நோய்த் தொற்று பரவுகிறது.

இதனால் சுகாதாரத் துறையினா் பாதுகாப்புக் கவச உடை அணிந்து மாதிரிகளை சேகரிக்கின்றனா். இதற்குத் தீா்வு காணும் வகையில் கோவை, வேடபட்டியைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பவா் கரோனா பரிசோதனைக்கு வருபவா்களிடம் சளி மாதிரிகளை சேகரிக்க ரோபோ கருவியை வடிவமைத்துள்ளாா்.

இவா் பொறியியல் படித்துவிட்டு செல்லிடப்பேசி செயலி உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கொரோனா பரிசோதனைக்காக வருபவா்களிடம் சளி சேகரிக்க வசதியாக இந்தக் கருவியில் அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனைக்கு வருபவா்களுக்குத் தகவல் கொடுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கருவி முன்பு எப்படி அமர வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்கும். தவிர நோயாளிகளின் நாசியில் இருந்து சளி மாதிரிகளை சேகரிக்கும் வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஒவ்வொரு முறையும் மாதிரிகளை எடுத்த பின் தானாகவே கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்துகொள்ளும் உத்தரவும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கருவியின் உள்ளே கிருமி நாசினியும் வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி மூலம் ஒருவரிடம் 2 நிமிடத்தில் சளி மாதிரி எடுக்க முடியும். செமி - ஆட்டோமேட்டிக் முறையில் கருவியைத் தயாரித்து உள்ளேன். இதனால் சளி எடுத்த பின் நோயாளிகளே சளி மாதிரிகளை டப்பாவில் அடைத்துக் கொள்ள வேண்டும். இதனை ரூ.2 ஆயிரம் மதிப்பீட்டில் உருவாக்கியுள்ளேன். முழுவதும் தானியங்கி முறையிலும் தயாரிக்க முடியும். அரசு உதவி செய்தால் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் கருவியை உற்பத்தி செய்ய முடியும் என்றாா்.