Back to Top

 உலகில் இதுவரை கொரோனாவால்   504,490 பேர் பலி!

உலகில் இதுவரை கொரோனாவால் 504,490 பேர் பலி!

June 29, 2020  11:50 am

Bookmark and Share
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பாதித்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 504,490 ஆக உயர்ந்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை வதைத்து வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூன் 29 ஆம் திகதி 1 கோடியை தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,249,741 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 504,490 ஆக உள்ளது. மேலும் 57 ஆயிரம் பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,637,077 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 128,437 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 1,345,254 பேருக்கு கரோனா பாதித்து, 57,658 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் 634,437 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 549,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,487 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.