Back to Top

ஒரு வருடத்தினுள் mCash மூன்று உயர் விருதுகளை சுவீகரித்துள்ளது

ஒரு வருடத்தினுள் mCash மூன்று உயர் விருதுகளை சுவீகரித்துள்ளது

June 30, 2020  09:24 am

Bookmark and Share
மொபிடெலின் பணக் கொடுப்பனவுக் கட்டமைப்பான mCash, ஒரு வருட காலப்பகுதியினுள் மூன்று உயர் கௌரவிப்பு விருதுகளை சுவீகரித்துள்ளது. இதில், 2019 ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற கொடுப்பனவுகளுக்கான FinTech App விருதை LankaPay Technnovation விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுவீகரித்திருந்ததுடன்ரூபவ் 2019 SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமத்துக்கான விருது மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 e வணிக வர்த்தக நாமங்களில் ஒன்றாக Brand Finance மற்றும் LMD ஆகியவற்றினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. செயற்பாடுகளை ஆரம்பித்து தற்போது 7ஆவது ஆண்டில் இயங்கும் mCash, நிதிச் கொடுப்பனவுகளை ஏற்றக் கொள்ளல் மற்றும் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது. இதனூடாக தேசத்துக்கு டிஜிட்டல் கட்டமைப்புகளினூடாக வலுவூட்டிய வண்ணமுள்ளது.

புத்தாக்கமான தீர்வுகளினூடாக மொபைல் நிதிக் கொடுப்பனவு துறையில் தொடர்ச்சியாக mCash தன்னை முன்னிலையில் திகழச் செய்துள்ளதுடன், ஒரு வருட காலப்பகுதியினுள் இந்த கௌரவிப்பு விருதுகளை வெற்றியீட்டியுள்ளமையானது, மக்கள் மத்தியில் அர்த்தமுள்ள வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர்த்துகின்றது. உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் சேவைகளை வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு பெற்றுக் கொடுக்க mCash தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், துரித கதியில் இலங்கைக்கு டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

பண வைப்புகள்ரூபவ் மீளப் பெறுகைகள், பணத்தை அனுப்புதல் மற்றும் பெற்றுக் கொள்ளல், கட்டணப் பட்டியல் மற்றும் மொபைல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், நிதி, லீசிங் மற்றும் காப்புறுதிக் கொடுப்பனவுகள், இதர நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள், சொப்பிங் கொடுப்பனவுகள், ஒன்லைன் கொடுப்பனவுகள், டிஜிட்டல் கடனுக்கு விண்ணப்பித்தல், நன்கொடைகளை வழங்கல், டிஜிட்டல் நிலையான ஆணைகள் மற்றும் துரித B2B வியாபார தீர்வுகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு mCash வசதியளிக்கின்றது. 2020 ஆம் ஆண்டை டிஜிட்டல்கள் கொடுக்கல் வாங்கல்களுக்கான ஆண்டாக இலங்கை மத்திய வங்கி பிரகடனம் செய்துள்ள நிலையில் அந்த தேசிய இலக்கை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில், அடுத்த சில மாதங்களில் சிறிய கடைகள் முதல் பாரியளவு சுப்பர்மார்க்கெட் தொடர்கள் வரை LankaQR வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடனான மூலோபாய பங்காண்மைகளினூடாக, mCash வாடிக்கையாளர்களுக்கு புதிய தீர்வுகள் பலதை எதிர்பார்க்க முடியும் என்பதுடன், வேகமாக விரிவாக்கமடைந்து வருவதால், mCash மிகவும் சௌகரியமான மொபைல் பணக் கொடுப்பனவுக் கட்டமைப்பாக திகழும். டிஜிட்டல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு முன்னணி பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொடுக்க mCash தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கும் என்பதுடன், வங்கிகளுடன் தொடர்பில்லாத மற்றும் தொடர்புகளைப் பேணுவோருக்கு சகாயமான எளிமைப்படுத்தப்பட்ட மொபைல் தீர்வுகளினூடாக சேவைகளை வழங்கவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.