Back to Top

HNB யின் Cash to Mobile ஊடாக மேற்கொள்ளப்பட்ட கார்ட் இல்லாத கொடுக்கல் வாங்கல்களில் துரிதமான அதிகரிப்பு

HNB யின் Cash to Mobile ஊடாக மேற்கொள்ளப்பட்ட கார்ட் இல்லாத கொடுக்கல் வாங்கல்களில் துரிதமான அதிகரிப்பு

June 30, 2020  06:53 pm

Bookmark and Share
இலங்கையின் முன்னணி தனியார் பிரிவு வங்கியான HNB, தமது கார்ட் இல்லாமல் பணத்தை மீளப் பெறும் வசதியான Cash too Mobile பயன்பாட்டை COVID-19 தொற்றுநோய் பரவும் அபாயம் உச்ச நிலையில் இருந்த காலப்பகுதியில் 70%ஆல் அதிகரிக்க முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது.

2020 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதி முழுவதும் Cash to Mobile ஆழடிடைந கொடுக்கல் வாங்கல்களில் பொதுவாக (மாதாந்தம்) 60%ஆல் அதிகரிப்பை வங்கி அவதானிதத்துள்ளது. 2020 மார்ச் மாதத்தில், இந்த வசதிகள் காரணமாக தனிப்பட்ட பயனர்கள் மத்தியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை 127%ஆன தனித்துவமான அதிகரிப்பை காட்டியதுடன் அதற்கு பிரதான காரணமாக அமைந்தது நாடு முழுவதும் பரந்து வாழும் இலங்கையர்கள் அவர்களது அத்தியாவசிய கொடுக்கல் வாங்கல்களை பூர்த்தி செய்து கொண்டமை மட்டுமன்றி அவர்களது அன்பார்ந்தவர்களுக்கு பணத்தை அனுப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டமை ஆகும். அதன்படி, வங்கியில் கார்ட் அல்லது கணக்கொன்று இல்லாத இந்த வசதியின் பயன்பாட்டால் HNB தன்னியக்க இயந்திரம் மூலம் அவர்களுக்கு தேவையான பணத்தை பெற்றுக் கொள்ள முடிந்தது.

டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் உடனடியாக அதிகரித்துள்ளமையினால் தெரிவது என்னவென்றால், இலங்கையர்களில் அதிகமானோர் மாற்று கொடுக்கல் வாங்கல் மாதிரிகளை ஏற்றுக் கொள்ளுகையில் இந்த வகையான ஆக்கபூர்வமான சேவை பயன்பாடுகளை காணமுடிவதாகும். விசேடமாக சமூக இடைவெளி குறித்த நடவடிக்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேளையில், கார்ட் இல்லாத பணம் மீளப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற சேவைகள் அன்றாட கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது பிரபலமான செயற்பாடாக இடம்பிடித்திருந்தது. என HNBஇன் வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன துறை வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜே விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களது உணவுப் பொருட்களுக்காக செலுத்தப்படும் கட்டணத்திலிருந்து மேலதிக வகுப்புக் கட்டணங்கள் வரை மட்டுமன்றி பணம் தேவையான எமது அன்பார்ந்தவர்களுக்கு உதவி செய்வது வரையிலான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் உச்சமடைந்த காலப் பகுதியில் Cash to mobile வசதி ஊடாக மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் அளவு அதிகரித்துள்ளமை கண்காணிக்கப்பட்ட ஏப்ரல் மற்றும் மே மாதகாலப்பகுதிகளுக்கு கட்டுப்பாட்டு கட்டணத்தை HNB அறவிடவில்லை.

வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான மற்றும் இலகுவான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக HNB துரிதமான முயற்சிகளை கவனத்தில் கொண்டு, இந்த வசதிகளை எமது வாடிக்கையாளர்களின் மேல் நோக்கி வரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் பொருத்தமானதுடன் தொற்றுநோயக்கு பிந்தைய உலகில் விரிவாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதற்காக அதனை பயன்படுத்தும் விதத்தில் இது மற்றுமொரு ஆரம்பம் மாத்திரமே என நாம் நம்புகின்றோம். என சஞ்ஜே விஜேமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வசதிகள் மூலம் வங்கியின் நடமாடும் வங்கியியல் தளத்தின் ஊடாக கையடக்க தொலைபேசிக்கு ஒரு கொடுக்கல் வாங்கலின் போது 40,000 ரூபா வரை பணம் அனுப்ப HNB கணக்கு வைத்திருப்பவருக்கு சந்தர்ப்பம் கிட்டும். அதன் பின்னர் பெற்றுக் கொள்பவர் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 617 தன்னியக்க HNB டெலர் இயந்திரத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ள கையடக்க தொலைபேசிக்கு குறுந் தகவல் ஊடாக அனுப்பப்படும் PIN இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

இந்த ஆண்டு பிஸ்னஸ் டுடேயால் இலங்கையின் உயர்மட்ட நிறுவனங்களில் முதலிடத்திலுள்ள வர்த்தக நிறுவனமாக HNB அறிவிக்கப்பட்டதுடன் முழு அளவிலான செயற்பாடுகளிலும் அதன் தொடர்ச்சியான முன்னோடி முயற்சிகளுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. அத்துடன் HNBஇன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனாதன் அலஸூக்கு இலங்கையின் மதிப்பு மிக்க ஆசிய வங்கியாளர் சஞ்சிகையினால் ‘CEO Leadership Achievement’ விருது வழங்கியதன் மூலம் ஹட்டன் நெஷனல் வங்கியின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்துள்ளமை சிறந்த உதாரணமாகும்.

மேலும் பல பாராட்டுக்களை கொண்ட HNB 2019ஆம் ஆண்டுக்கான 'இலங்கையின் சிறந்த வங்கி' என யூரோமனி சஞ்சிகை அறிவித்ததுடன், இங்கிலாந்தில் வெளியாகும் முன்னணி வங்கிசார் சஞ்சிகையான பேங்கர் சஞ்சிகையில் உலகில் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின் முன்னணி தனியார்துறை வங்கியென்ற அந்தஸ்தைப் பெற்றது. அண்மையில் இலங்கை சர்வதேச வர்த்தக சபை மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனம் (CIMA) ஆகியவற்றால் மிகவும் பாராட்டத்தக்க முதல் 10 நிறுவனங்களில் HNB உள்ளதுடன் LMD சஞ்சிகையினால் Top 100 Clubஇல் அகில இலங்கை வங்கிகளின் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் சிறந்த சாதனைப் படைத்தது. இது வங்கியின் கடந்த 25 ஆண்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.