Back to Top

AppiGo Appஐ அறிமுகப்படுத்தி சிறிய வர்த்தகர்களை பலப்படுத்துவதற்கு HNB கைகொடுக்கிறது

AppiGo Appஐ அறிமுகப்படுத்தி சிறிய வர்த்தகர்களை பலப்படுத்துவதற்கு HNB கைகொடுக்கிறது

June 30, 2020  06:57 pm

Bookmark and Share
இலங்கையில் மிகவும் டிஜிடிட்டல் கண்டுபிடிப்புக்களைக் கொண்ட HNB, தமது பாவனையாளர்களுக்கு AppiGo என்ற புரட்சிகரமான வலைப்பின்னல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அதனூடாக எந்தவொரு வர்த்தகத்திற்கும் இலகுவாகவும் துரிதமாகவும் தொடர்ச்சியாக e-commerce திறன்களை அமைத்துக் கொள்வதற்கு சந்தர்ப்பம் கிட்டும்.

பிரபலமான மென்பொருள் மேம்பாட்டு நிபுணர்களான hSenid உடன் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ள HNB AppiGo ஒரு சில க்ளிக்களில் எந்தவொரு வர்த்தக பிரிவினருக்கும் இணையத்தளம் ஊடாக வணிக செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது, வாடிக்கையாளர்கள் தமது Orderகளை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாவனையாளர்களுக்கான பொருள் விநியோகத்தை கவனித்துக்கொள்ளும் கட்டமைப்புக்கு மேலதிகமாக வலைப்பின்னல் ஊடான கட்டணம் செலுத்துதலை மேற்கொள்ளல் மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய பல வேலைத் திட்டங்கள் அடங்கிய அந்தந்த வர்த்தக செயற்பாடுகளுக்கான சொந்த வலைத்தள வசதிகளை உள்ளடக்கியுள்ளது. 'இலங்கை e-commerceக்கு சமீப வருடங்களில் மாற்றமடைந்தமையால் ஒரு நிலையான வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. என்றபோதிலும், COVID-19 தொற்று நீடிப்புடன் இதற்கான கேள்வியானது மிகவும் பிரமாண்டமான விதத்தில் அதிகரித்துள்ளதுடன் பெரும்பாலான சிறு வர்த்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை கண்டுபிடித்து இந்த சவால் நிறைந்த நிலைமைகளில் பயணிப்பதற்கு வழிவகுத்துள்ளது. பெரும்பாலானோருக்கு தமது வாடிக்கையாளர்களின் ழுசனநசகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்காக சமூக ஊடக தளங்கள் மற்றும் Whatsapp போன்றவற்றில் நம்பிக்கை வைப்பதற்கு இடமளித்துள்ளது.

அதனால் AppiGo Appஐ துரிதமாக அறிமுகம் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது. ஏனென்றால் இவ்வாறான வர்த்தகங்களுக்கு ஒட்டுமொத்த நடவடிக்கைகளை முழுமையாக ஒழுங்குபடுத்துவதை சாத்தியமாக்குகிறது. இதனூடாக அவர்களது தயாரிப்புக்களை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ள முடிவதுடன் அவர்களது நிர்வாக பணிச் சுமையும் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. எமது எதிர்கால இலக்கானது e-commerceஇற்குள் தமது வர்த்தக நடவடிக்கைகள் முறையினால் முன்னோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ள எந்தவொரு வர்த்தகருக்கும் குறைந்த செலவில் இலகுவாக பிரவேசிப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதாகும். என HNBஇன் வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொதுமுகாமையாளர், சஞ்ஜே விஜேமான்ன தெரிவித்தார்.

எந்தவொரு விற்பனையாளருக்கும் மிகவும் இலகுவாக இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்காக பதிவு செய்துக் கொள்ள முடியுமென உறுதிப்படுத்துவதற்கு வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. AppiGo Appஐ பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் தேவையான அடிப்படை ஆவணங்களும் இணையத்தளத்தின் ஊடாகவே வழங்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட பின்னர், அந்த வர்த்தகம் அவர்களது வர்த்தக Logo, வர்த்தக பிராண்ட் வண்ணங்கள், தயாரிப்புகள் மற்றும் விலைப்பட்டியல் போன்றவற்றை தமது இணையத்தள வாயிலை தமக்கு தேவையான விதத்தில் மாற்றி உடனடியாக ஆரம்பிக்க முடிவதுடன் வாடிக்கையாளர்களின் ழுசனநசகளை பெற்றுக் கொடுக்க ஆரம்பிக்க முடியும். ஒட்டுமொத்த இணையத்தள தனிப்பயனாக்க நடவடிக்கைகளை தமக்கேற்ற விதமாக மாற்றியமைப்பது மிகவும் சாதாரண விடயமாக அமைவதோடு அதை 15 நிமிடங்களுக்குள்ளான குறைந்த காலப்பகுதியில் முழுமையாக செய்ய முடியும். முழுமையான வர்த்தக இணைய பக்கத்தை அனைத்து சாதனங்களிலும் செயற்படுத்தக்கூடிய வகையில், அதாவது பொருத்துதல் மற்றும் பதிலளிக்கக் கூடிய விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. HNB ஊடாக கட்டணம் செலுத்துவதற்கிடையில் வாடிக்கையாளர்களின் Orderகளை பாதுகாப்பாக மற்றும் முறையாக விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விற்பனையாளருக்கு வாய்ப்பு கிட்டும்.

வலைப்பின்னல் தளத்தின் பயன்பாடு மற்றும் ஒட்டுமொத்த பதிவு செய்யும் நடவடிக்கைகள் முற்றிலும் இலவசம் என்பதுடன் பெயரளவு கொடுக்கல் வாங்கல் கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.

குறிப்பிடத்தக்க விடயமானது, கட்டமைப்பானது எந்தவொரு வர்த்தகருக்கும் தற்போது காணப்படும் விநியோக சேவைகளுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்காதவர்களுக்கு மேலதிக கட்டணத்துடன் AppiGo ஊடாக மூன்றாம் நிலை விநியோக சேவைகளுக்கு பிரவேசிக்க முடியும். இந்த ஆண்டு பிஸ்னஸ் டுடேயால் இலங்கையின் உயர்மட்ட நிறுவனங்களில் முதலிடத்திலுள்ள வர்த்தக நிறுவனமாக HNB அறிவிக்கப்பட்டதுடன் முழு அளவிலான செயற்பாடுகளிலும் அதன் தொடர்ச்சியான முன்னோடி முயற்சிகளுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. அத்துடன் HNBஇன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனாதன் அலஸூக்கு இலங்கையின் மதிப்பு மிக்க ஆசிய வங்கியாளர் சஞ்சிகையினால் ‘CEO Leadership Achievement’ விருது வழங்கியதன் மூலம் ஹட்டன் நெஷனல் வங்கியின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்துள்ளமை சிறந்த உதாரணமாகும்.

மேலும் பல பாராட்டுக்களை கொண்ட HNB 2019ஆம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த வங்கி' என யூரோமனி சஞ்சிகை அறிவித்ததுடன், இங்கிலாந்தில் வெளியாகும் முன்னணி வங்கிசார் சஞ்சிகையான பேங்கர் சஞ்சிகையில் உலகில் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையின் முன்னணி தனியார்துறை வங்கியென்ற அந்தஸ்தைப் பெற்றது. அண்மையில் இலங்கை சர்வதேச வர்த்தக சபை மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் முகாமைத்துவ நிறுவனம் (CIMA) ஆகியவற்றால் மிகவும் பாராட்டத்தக்க முதல் 10 நிறுவனங்களில் HNB உள்ளதுடன் LMD சஞ்சிகையினால் Top 100 Clubஇல் அகில இலங்கை வங்கிகளின் முதல் இடத்தைப் பெற்றதன் மூலம் சிறந்த சாதனைப் படைத்தது. இது வங்கியின் கடந்த 25 ஆண்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB AppiGo தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள 072-080-8080 உடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது cardipg@hnb.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவும்.