Back to Top

யாழில் கால்பந்து விளையாடிய சஜித்!

யாழில் கால்பந்து விளையாடிய சஜித்!

July 2, 2020  08:04 pm

Bookmark and Share
கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தான் ஆட்சி அமைத்தால் அவ்விடயம் தொடர்பான விசாரணை முழுதளவில் முன்னெடுக்கப்படும் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (02) வியாழக்கிழமை காலை ஊடகவியலாளர் சந்திப்பு நடந்தது.

இதில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் உமாசந்திர பிரகாஸ் மற்றும் கனேஸ் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, சஜித் பிரேமதாசாவிடம் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்த விசாரணைகளும் கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

நீங்கள் ஆட்சி அமைத்தால் இவ்விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்ளப்படுமா என்று ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, அவர்கள் கொலை செய்யப்படுவது போன்ற செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டால் அது தொடர்பான முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் வடக்கு,கிழக்கு மற்றும் தெற்கு என்ற பாகுபாடுகள் இல்லாது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

உயிர் பலி ஏற்படாத நிலை உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு கொடுக்கப்பட வேண்டும். இவற்றை நான் செய்வேன். நான் செல்வதைத்தான் செய்வேன் என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நெல்லியடி இராஜ கிராமத்தில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டங்களின் நினைவு கல்லினை சஜித் பிரேமதாச இன்று தந்தையின் நினைவாக திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இராஜ கிராம மக்களை சந்தித்து உரை நிகழ்த்தினார் இதன்போது மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.

அதை அடுத்து ராஜ கிராமத்தில் உள்ள கரவை சுடர் உதைபந்தாட்ட வீரர்களுடன் இணைந்து கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Most Viewed