Back to Top

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 100 பேர் வீடுகளுக்கு

July 11, 2020  09:11 am

Bookmark and Share
மத்திய கிழக்கில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்த நிலையில் பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று காலை தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இன்று தனிமைப்படுத்தல் நிறைவு செய்யப்பட்டு விமானப்படையின் பேருந்துகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கண்டி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை சேர்ந்த இவர்களுக்கு கொவிட் 19 தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பின்னர் இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளனர்.