Back to Top

ஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை

ஐ.தே.கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் கோரிக்கை

July 11, 2020  01:49 pm

Bookmark and Share
கட்சியொன்றின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்யும் குழுக்களுக்கு பொதுமக்களுக்காக சேவை செய்வதற்கு நேரம் இருக்காது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், ஐக்கிய தேசிய கட்சியினர் தற்போது பாராளுமன்ற அதிகாரத்தை பெற்றுக் கொள்வதை விடுத்து சிறிகொத்தவை காப்பாற்றிக் கொள்ள போராடுகின்றனர்.

அதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவிற்கு சிறிகொத்தவை பகிர்ந்து கொள்வதற்கு இடமளித்து தன்னுடன் இணைந்துக் கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.