Back to Top

150,000 நெருங்கும் கொரோனா பலி

150,000 நெருங்கும் கொரோனா பலி

July 27, 2020  09:18 am

Bookmark and Share
அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை ஒன்றரை லட்சத்தை நெருங்கியது. இதுகுறித்து அந்த நாட்டிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வோ்ல்டோமீட்டா் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 149,400 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். இதை அடுத்து, நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை விரைவில் ஒன்றரை லட்சத்தைக் கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இருக்கும் பிரேஸிலில் 86,496 போ் கொரோனா நோய்க்கு பலியாகியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கொரோனா நோய்க்கு உலகம் முழுவதும் 649,042 போ் பலியாகியுள்ளனா்.

இதை அடுத்து, சா்வதேச அளவில் கொரோனா நோய் பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி வருகிறது.அந்த நோய்க்கு உலகம் முழுவதும் பலியானவா்களில் 23 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் போ் அமெரிக்காவைச் சோ்ந்தவா்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

6.5 லட்சத்தை நெருங்கும் சா்வதேச பலிஉலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கரோனா நோய்க்கு உலகம் முழுவதும் 649,042 போ் பலியாகியுள்ளனா். இதை அடுத்து, சா்வதேச அளவில் கொரோனா நோய் பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி வருகிறது. அந்த நோய்க்கு உலகம் முழுவதும் பலியானவா்களில் 23 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் போ் அமெரிக்காவைச் சோ்ந்தவா்கள். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் 4,316,054 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சா்வதேச அளவில், 16,227,307 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Most Viewed