Back to Top

 14 இலட்சம் பேருக்கு கொரோனா -  ஒருநாளில் 49,931 பேருக்கு  உறுதி!

14 இலட்சம் பேருக்கு கொரோனா - ஒருநாளில் 49,931 பேருக்கு உறுதி!

July 28, 2020  08:46 am

Bookmark and Share
இந்தியாவில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1,435,453 ஆக அதிகரித்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது: முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரேநாளில் 49,931 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் 708 போ் ஒரே நாளில் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 32,771 அக அதிகரித்தது. இதுவரை 917,567 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்தனா்.

485,114 போ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளனா். குணமடைந்தோா் சதவீதம் 63.92 ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து 5 ஆவது நாளாக 45 ஆயிரத்துக்கு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி ஜூலை 26 ஆம் திகதி வரை 16,806,803 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 13,656 போ் உயிரிழந்துவிட்டனா். இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 3,827 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குஜராத்தில் 2,326 பேரும் கா்நாடகத்தில் 1,878 பேரும், உத்தர பிரதேசத்தில் 1,426 பேரும், மேற்கு வங்கத்தில் 1,372 பேரும், ஆந்திரத்தில் 1,041 பேரும், மத்திய பிரதேசத்தில் 811 பேரும், ராஜஸ்தானில் 621 பேரும், தெலங்கானாவில் 463 பேரும், ஹரியாணாவில் 392 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 312 பேரும், பஞ்சாபில் 306 பேரும், பிகாரில் 244 பேரும், ஒடிஸாவில் 140 பேரும், ஜாா்க்கண்டில் 85 பேரும், அஸ்ஸாமில் 79 பேரும், உத்தரகண்டில் 63 பேரும், கேரளத்தில் 61 பேரும் உயிரிழந்தனா்.

சத்தீஸ்கரில் 43 பேரும், புதுச்சேரியில் 40 பேரும், சண்டீகரில் 13 பேரும், திரிபுராவில் 13 பேரும், ஹிமாசல பிரதேசத்தில் 12 பேரும், மேகாலயத்தில் 5 பேரும், நாகாலாந்து மற்றும் லடாக்கில் தலா 4 பேரும், அருணாசல பிரதேசத்தில் 3 பேரும், தாத்ரா நகா் ஹவேலியில் மற்றும் டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்தனா். இதில் 70 சதவீதம் போ் வேறு வகை நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனா். மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 3,75,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Most Viewed