Back to Top

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் 8,376 புத்தகங்கள், 32 ஆயிரம் பொருட்கள்!

ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் 8,376 புத்தகங்கள், 32 ஆயிரம் பொருட்கள்!

July 30, 2020  09:12 am

Bookmark and Share
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள் உள்பட 32 ஆயிரம் பொருட்கள் இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் 26 வகையான பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களின் மொத்த எண்ணிக்கை 32,721 ஆகும்.

தங்கம் 4 கிலோ 372 கிராம், வெள்ளி 601 கிலோ 424 கிராம், வெள்ளிப் பொருள்கள் 162 விதமானவை, தொலைக்காட்சிகள் 11, குளிா்சாதனப் பெட்டிகள் 10, ஏ.சி. இயந்திரங்கள் 38, மரச்சாமன்கள் 556, சமையலறைப் பொருள்கள் 6,514, சமையலறை மரச்சாமன்கள் 12, சமையலறை தொடா்பான சாமான்கள் 1,055, பூஜை பொருள்கள் 15, ஆடைகள், படுக்கை விரிப்புகள் 10 ஆயிரத்து 438, செல்லிடப்பேசி, தொலைபேசிகள் 29, சமையலறை மின்னணு பொருள்கள் 221, மின்சாதனப் பொருள்கள் 251, புத்தகங்கள் 8,376, நினைவுப் பரிசுகள் 394, நீதிமன்ற ஆவணங்கள், வருமான வரி ஆவணங்கள் 653, எழுதுபொருள்கள் 253, மரச்சாமான் உபகருவிகள் 1,712, சூட்கேஸ்கள் 65, அழகுசாதனப் பொருள்கள் 108, கடிகாரங்கள் 6, கேனான் ஜெராக்ஸ் 1, லேசா் பிரிண்டா் 1, இதர பொருள்கள் 959 என மொத்தம் 32 ஆயிரத்து 721 பொருள்கள் உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Viewed