Back to Top

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் முதலாவது வெளிப்படை மதிப்பீட்டில் பீப்பள்ஸ் லீசிங் மூன்றாமிடத்தல் தரப்படுத்தப்பட்டுள்ளது

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் முதலாவது வெளிப்படை மதிப்பீட்டில் பீப்பள்ஸ் லீசிங் மூன்றாமிடத்தல் தரப்படுத்தப்பட்டுள்ளது

August 1, 2020  11:03 am

Bookmark and Share
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்கா இலங்கையின் கூட்டாண்மை அறிக்கையிடலில் முன்னெடுத்திருந்த முதலாவது மதிப்பீட்டின் போது இலங்கையின் முதல் தர வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் மூன்றாமிடத்தையும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளது.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் சந்தை மூலதனவாக்கத்தின் பிரகாரம் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சிறந்த 50 நிறுவனங்களை தெரிவு செய்து அவற்றின் மீது இந்த மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை (TRAC) என இந்த அறிக்கைக்கு பெயரிடப்பட்டிருந்தது.

இலங்கையின் சிறந்த 50 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை மோசடி தவிர்ப்பு நிகழ்வுகள் நிறுவன இருப்புகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பிரதான நிதித் தகவல்களை வெளிப்படுத்தல் போன்ற மூன்று தொனிப்பொருட்களில் மதிப்பீட்டுக்கு உட்படுத்துவது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையின் நோக்கமாக அமைந்திருந்தது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருடாந்த நிதி அறிக்கைகளிலிருந்து தகவல்களைத் திரட்டி இந்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ரஹிம் கருத்துத் தெரிவிக்கையில் ´பீப்பள்ஸ் லீசிங் பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இது உண்மையில் ஒரு சிறந்த செய்தியாக அமைந்திருக்கும். எமது நாட்டின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் தகவல்களின் வெளிப்படைத்தன்மையை ஆராயும் வகையில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்கா இந்த மதிப்பீட்டை முதன்முறையாக முன்னெடுத்திருந்தது. மொத்த 50 நிறுவனங்களில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டமையானது தனது கூட்டாண்மை அறிக்கையிடலில் பீப்பள்ஸ் லீசிங் எந்தளவுக்கு வெளிப்படைத்தன்மையை பேணுகின்றது என்பதை உறுதி செய்துள்ளது.´ என்றார்.

இந்த மதிப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர கருத்துத் தெரிவிக்கையில் ´தற்போதைய வெளிப்படுத்தல் செயன்முறைகள் தொடர்பில் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த அறிக்கை அமைந்துள்ளது. சிறப்பாக இந்தச் செயற்பாடுகளைப் பின்பற்றும் நிறுவனங்களை பாராட்டி ஊக்குவிப்பதாகவும் முன்னேற்றத்துக்கு வாய்ப்புள்ள நிறுவனங்களுக்கு அதை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ளமையானது அந்நிறுவனங்கள் தவறாக பயணிக்கின்றன எனப் பொருள்படாது. இவ்வாறான நிறுவனங்களுக்கு தமது வெளிப்படுத்தல்களில் மேம்படுத்தல்களை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.´ என்றார்.

90 நாடுகளில் இயங்கும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஜேர்மனியின் பேர்ளின் நகரில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஆர்ஜென்டீனா பெல்ஜியம் டென்மார்க் கிறீஸ் ஹங்கேரி இந்தோனேசியா இத்தாலி குவைட் நோர்வே சுவீடன் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலும் இவ்வாறான வெளிப்படை மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாக 1996 ஆம் ஆண்டில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்த பீப்பள்ஸ் லீசிங் லீசிங் துறையில் முன்னோடியாக அமைந்துள்ளதுடன் மாபெரும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா நிறுவனத்தின் தரப்படுத்தலின் பிரகாரம் பீப்பள்ஸ் லீசிங் A+ (lka) தரப்படுத்தலைப் பெற்றுள்ளது. நாட்டின் சிறந்த 10 பொறுப்பு வாய்ந்த நிறுவனசார் குடிமகன் என்பதில் ஐந்தாவது தடவையாகவும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கையினுள் பெறுமதி வாய்ந்த மற்றும் பிரபல்யமான வர்த்தக நாம தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் Brand Finance Awards இல் இலங்கையின் சிறந்த வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம் கௌரவிப்பைப் பெற்றிருந்தது. மேலும் இந்நிறுவனம் பெற்றுக் கொள்ளும் இலாபத்தில் ஒரு பங்கை சூழல் பாதுகாப்பு மற்றும் நிதிப் பாதுகாப்பு தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்தல் ஆரம்பப் பள்ளிஃபாடசாலை கல்வி போன்று தொழிற்கல்வி வளர்ச்சி மற்றும் பொதுச் சமூக வசதிகள் அபிவிருத்திக்கு வலுவூட்டும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்கின்றது.

Most Viewed