Back to Top

களனி கேபல்ஸ் பிஎல்சியின் “Kelani Breezer” மின்விசிறிகளுக்கு மின் சேமிப்புக்கான '2 Star' சான்றளிப்பு

களனி கேபல்ஸ் பிஎல்சியின் “Kelani Breezer” மின்விசிறிகளுக்கு மின் சேமிப்புக்கான '2 Star' சான்றளிப்பு

August 1, 2020  11:14 am

Bookmark and Share
களனி கேபல்ஸ் பிஎல்சியின் மின்விசிறிகள் தயாரிப்பான Kelani Breezer தெரிவுகளுக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திடமிருந்து மின் சேமிப்புக்கான ´2 Star’ சான்றளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் தர பாதுகாப்பான இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்கள் உற்பத்தியாளரான களனி கேபல்ஸ் பிஎல்சி திகழ்கின்றது.

தயாரிப்பு உள்ளம்சங்கள் பாதுகாப்பு உத்தரவாதச் சான்றிதழ் உயர் தரம் மற்றும் எரிபொருள் சேமிப்பு காரணமான பொருளாதார சிக்கனம் போன்றன தொடர்பில் கடுமையான மதிப்பாய்வுகளைத் தொடர்ந்து இந்த ´2 Star´ சான்றளிக்கப்பட்டுள்ளது. களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபாலவிடம் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. சித்திக சேனாரட்ன கையளித்திருந்தார்.

இந்தியாவின் முன்னணி மின்விசிறிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான Havells, களனி கேபல்ஸ் பிஎல்சியின் கோரிக்கைக்கமைய ‘Kelani Breezer’ மின்விசிறிகளை இலங்கை சந்தைக்கு பொருத்தமான வகையில் தயாரித்துள்ளது.

உலகின் 50 க்கும் அதிகமான நாடுகளில் Havells கம்பனி தனது இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்த வண்ணமுள்ளது. மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ‘Kelani Breezer’ மின்விசிறிகளில் விசேட கட்டமைப்புகள் காணப்படுகின்றன. 74 வாற்றுகள் எனும் குறைந்த மின் நுகர்வைக் கொண்டுள்ளன. இலங்கையின் சந்தையில் காணப்படும் குறைந்த மின்நுகர்வைக் கொண்ட மின்விசிறியாக ‘Kelani Breezer’ திகழ்கின்றதுடன் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ´2 Star’சான்றையும் பெற்றுள்ளது.

இரண்டு வருட உத்தரவாதத்துடன் காணப்படுவதுடன் குறைந்த வோல்ட் அளவு மின்சாரத்திலும் இயங்கக்கூடியது.

சந்தையில் காணப்படும் பெருமளவான மின்விசிறிகளின் அலகுகள் இலகுவில் துருப்பிடிக்கக்கூடியனவாக அமைந்துள்ளன. ‘Kelani Breezer’ மின்விசிறியில் மேல் மற்றும் கீழ் புற மேலுறைகள் காணப்படுவதுடன் மோட்டார் அலுமினிய மேற்பகுதியை கொண்டுள்ளது. இதனால் துருப்பிடித்தல் அல்லது நிறம்மாறல் போன்றன ஏற்படாது.

‘Kelani Breezer’ மின்விசிறிகள் இரட்டை பியரிங்களை கொண்டுள்ளன. மிருதுவான செயற்பாட்டையும் நீண்ட காலம் இயற்கையான செயற்பாட்டை கொண்டதாக அமைந்திருக்கும்.

களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில் ´இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் வழங்கப்படும் ´2 Star’ சான்றினால் சந்தைப்பகுதியில் நாம் விநியோகிக்கும் உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் உயர் தரம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களினால் களனி கேபல்ஸ் தயாரிப்புகள் முதல் தர தயாரிப்புகளாக வரவேற்கப்படுகின்றன.´ என்றார். மேலும் குறிப்பிடுகையில் ´எமது வாடிக்கையாளர்களின் ஊக்குவிப்பின் காரணமாக நாம் ‘Kelani Breezer’ மின்விசிறிகள் தெரிவை நாம் விஸ்தரித்துள்ளோம். உலகப் புகழ்பெற்ற Havells நிறுவனத்தினால் இலங்கையின் பாவனையாளர்களுக்கு பொருத்தமான வகையில் Kelani Breezer மின்விசிறியை நாம் உற்பத்தி செய்கின்றோம்.´ என்றார்.

களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2015 இல் களனி கேபல்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனி கேபள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபல்ஸ் உற்பத்தி பிரிவுரூபவ் 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது.

2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது B2B பிரிவில் சிறந்த நிறுவனசார் சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டுக்கான விருதை தனதாக்கியிருந்தது. SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல் களனி கேபல்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில் இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில் தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 2016ம் ஆண்டில் தேசிய மனித வளங்கள் சிறப்புக்கான வெள்ளி விருதை தனதாக்கியிருந்ததுடன் ஜனாதிபதி சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சூழல் பாதுகாப்பான அறிக்கையிடலுக்கான தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.

தேசிய சூழல்பாதுகாப்பு சார் அறிக்கையிடலை பின்பற்றுவதற்காக வாக்குறுதி எடுத்துக் கொண்ட இலங்கையின் முதலாவது நிறுவனமாக களனி கேபிள்ஸ் பிஎல்சி திகழ்கிறது. சூழலுக்கு நட்பான சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் களனி கேபிள்ஸ் பிஎல்சி ´பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு´ எனும் லேபிளை பயன்படுத்துவதற்கு சான்றை பெற்றுள்ளது. ஏற்றுமதி சந்தைக்கு நிறுவனத்தின் கீர்த்தி நாமத்தில் இது பெருமளவு பெறுமதியை சேர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.

Most Viewed