Back to Top

பிரைம் குழுமம் Beach Front வீட்டுமனைத் திட்டத்தின் முதலாம் கட்டத்தை பூர்த்திசெய்து சொகுசுமாடி வீட்டுத்துறையை புதிய பாதைக்கு இட்டுச் செல்கிறது

பிரைம் குழுமம் Beach Front வீட்டுமனைத் திட்டத்தின் முதலாம் கட்டத்தை பூர்த்திசெய்து சொகுசுமாடி வீட்டுத்துறையை புதிய பாதைக்கு இட்டுச் செல்கிறது

August 1, 2020  11:18 am

Bookmark and Share
இலங்கையில் வீடுகள் மற்றும் காணி கட்டட வாத்தகத் துறையில் தலைவராகவும் மற்றும் சொகுசு வீடுகள் நிர்மாணிக்கும் துறையில் சர்வதேச விருதுகளையும் வென்ற பிரைம் குழுமம் தமது சிறந்த வீட்டுத் திட்டங்களில் முன்னணி திட்டமான கொழும்புக்கு அருகாமையிலும் கடலுக்கு அண்மையிலும் நிர்மாணிக்கப்பட்ட வத்தளை, உஸ்ஸடகியாவ Beach Front சொகுசு வீட்டுத் தொகுதியின் முதல் கட்ட நிர்மாணிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்து 2020 ஜூலை மாதம் 25ஆம் திகதி இந்த வீட்டுத் தொகுதியின் வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வைபவரீதியாக கையளித்தது.

கொழும்பை அண்டியுள்ள அழகான கடற்கரை மற்றும் இயற்கை அழகு நிறைந்த உஸ்ஸடகியாவ விடுமுறை விடுதியின் சிறப்பை நினைவூட்டும் மிகவும் இடவசதிகளுடன் கூடிய இரண்டு படுக்கை அறைகள் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய சொகுசு வீடுகள் 72ஆல் உள்ளடக்கப்பட்ட வீட்டுத் தொகுதியாகும். சன சந்தடி மிக்க கொழும்பு நகரில் வாழ்வோரின் மன ஆரோக்கியத்திற்காக கொழும்புக்கு அருகாமையில் கவர்ச்சிகரமான அமைதியான சூழலில் விடுமுறையைக் கழிப்பதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய தமக்கே சொந்தமான விடுமுறை விடுதியை தனதாக்கிக் கொள்வதற்கு கனவு காணும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் Beach Front சொகுசு வீட்டுத் தொகுதி மிகவும் உகந்த வீட்டு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சொகுசு வீட்டுத் தொகுதியின் அனைத்து வீடுகளும் ஒரே விதமாக அமைந்துள்ளதனால் இந்து சமுத்திரத்தின் தொலைத்தூர அடிவானம் மற்றும் கண்ணைக் கவரக்கூடிய கடற்கரையை பார்த்து ரசிக்க முடிகின்றமை விசேட அம்சமாகும்.

Beach Front சொகுசு வீட்டு திட்டத்தில் பாதுகாப்பு கெமரா கட்டமைப்பு 24 மணித்தியாலமும் செயற்படும் என்பதுடன் அந்த பாதுகாப்பு கெமராக்கள் வீட்டுத் தொகுதியின் பொதுச் சூழலுக்கு அருகில் மற்றும் லிஃப்ட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சொகுசு வீட்டுத் தொகுதியில் அனைத்து வீடுகளும் குளிரூட்டப்பட்டுள்ளதுடன் உயர்ந்த தரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கட்டடப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மட்டுமன்றி சமையலறையில் பென்ட்ரி கபர்ட் பொருத்தப்பட்டுள்ளதோடு நவீன விதத்திலான கேஸ் அடுப்பு மற்றும் Hood சாதனங்கள், மைக்ரோவேவ் அடுப்பு மற்றும் குளிர்சாதனப் பெட்டி ஆகியனவும் உள்ளடங்கும். அனைத்து சுகாதார முறையிலான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் துணி துவைப்பதற்காக வீட்டிற்குள்ளே பிரிதொரு இடத்தில் சலவை இயந்திரமொன்றுடன் கூடிய இடமொன்று அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் உச்ச அளவு பிரயோசனம் அனுபவிப்பதற்காக சொகுசு வீட்டிற்குள் சிறந்த காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வருவதற்காக அதிகமான வாய்ப்பளிக்கும் விதமாக இந்த சொகுசு வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மின் சக்தியை மிகவும் உச்ச அளவில் குறைத்து பயன்படுத்தும் நோக்கில் LED மின் குமிழ்கள் வீடு முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. குளியலறைகளுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட Hans Grohe குழாய்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு நிர்மாணிக்கப்படும் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்த மேல்மாடி அமைக்கப்பட்டுள்ளதால் சமூக கூட்டங்களுக்கான மண்டபம் மற்றும் வைபவ மண்டபம், விருந்தினர்களின் அறைகள், திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையம், இடவசதி கொண்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யோகா பயிற்சி பகுதி, திறந்த மேல் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பாபிகியு பகுதி, கடற்கரை கரப்பந்தாட்ட சூழல், சூரிய குளியல் பகுதி மற்றும் தனிப்பட்ட கடற்கரை, கடல் மற்றும் கடற்கரையை பார்வையிடுவதற்கு ஏற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் வசதிகள், போன்ற பொது வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் பயன்படுத்த முடியும்.

Beach Front சொகுசு வீட்டுத் தொகுதியின் கட்டடக் கலை மற்றும் மாதிரி நிர்மாணிப்புக்கள் அனைத்தும் பிரைம் குழுமத்தில் விருது வென்ற தொழில் நிபுணர்கள் மற்றும் பங்குதார நிறுவனங்களினது ஒத்துழைப்பினால் மேற்கொள்ளப்பட்டதுடன் 25 வருட நன்மதிப்பைப் பெற்ற பிரைம் குழுமத்தின் ஊழியர்களது சிறப்பே இந்த சொகுசு வீட்டுத் திட்டத்தின் ஊடாக வெளிப்படுகிறது.

விசேடமாக கொழும்பிலில் இருந்து 30 நிமிடத்திற்குள்ளான குறுகிய காலத்திற்குள் இந்த இடத்திற்கு பிரவேசிக்கக் கூடிய வாய்ப்பும், கெரவலபிட்டி அதிவேக பாதையும், நீர்கொழும்பு மற்றும் வத்தளை போன்ற நகரங்களுக்கு 25 நிமிடங்களுக்கு குறைவான காலப்பகுதிக்குள் செல்ல முடிதல் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளதனால் பல்வேறு தேவைகளுடன் கூடிய பல்வேறு வர்த்தக குழுக்களுக்கு சொந்தமான பாரிய குழுவினரது தேவைகளுடன் கூடிய விதத்தில் இந்த சிறந்த வீட்டுத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சனநெரிசல் மிக்க கொழும்பு நெரிசலிலிருந்து விடுபட்டபோதிலும் கொழும்புக்கு மிகவும் அண்டிய கடங்கரைக்கு அருகாமையில் இருந்து அதனை ரசிக்கக் கூடிய சொகுசான தனியார் விடுமுறை விடுதியொன்றை பெற்றுக் கொள்ளக் கிடைக்கின்றமை இலங்கையிலுள்ள பெரும்பாலானோருக்கு கனவாக உள்ளது. அதனால் இந்த வாடிக்கையாளர் தேவையை நிறைவேற்றுவதற்காக எம்மால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த சொகுசு வீட்டு செயற்திட்டமாக உஸ்ஸட்டகியாவையில் அமைக்கப்பட்ட Beach Front வீட்டுத் தொகுதி செயற்திட்டத்தை கூறமுடியும். Beach Frontஐ சொகுசு வீட்டுத் தொகுதியில் இருந்து அதிவேக பாதை கட்டமைப்பு மற்றும் முன்னணி நகர்களுக்கும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் 30 நிமிடங்கள் என்ற குறைந்த நேரத்திற்குள் செல்வதற்கு முடியுமென்பது இதன் மற்றுமொரு விசேட அம்சமாக கூறமுடியும். ஏனைய விசேட அம்சமாக இந்த சூழலில் உள்ள இயற்கை அழகாகும். சுத்தமான கடற்கரை, இந்து சமுத்திரத்திலிருந்து வரும் குளிரான காற்றுடன் கூடிய நீண்ட உடல் மற்றும் மனதளவிலான ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய இடமாக எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி இந்த சுற்றாடலை முன்மொழிய முடியும். என பிரைம் குழுமத்தின் தலைவர் திருமதி சந்தமினி பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரைம் குழுமத்தின் வீட்டு திட்டத்தின் பன்முகத்தன்மைக்கு புதிய பொருள் சேர்க்கப்பட்ட Beach Front சொகுசு வீட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜூலை மாதம் 25ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்க பிரைம் குழுமம் தீர்மானித்திருந்தது. இந்த இரண்டாம் கட்டம் 1 முதல் 4 வரையிலான படுக்கை அறைகள் மற்றும் அனைத்து வீட்டு உபகரணங்கள் மற்றும் மின் உபகரணங்கள் அடங்கிய 116 சொகுசு வீடுகளுடன் கூடிய வீட்டுத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது. கடற்கரைக்கு அருகாமையில் நிர்மானிக்கப்படுவதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரே விதமாக கடற்கரையை ரசிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிட்டும். கொள்கைகளுக்கு அமைய நிர்மானிக்கப்படும் அதிசொகுசு 4 வீடுகள் Beach Front இரண்டாம் கட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. 24 மணித்தியாலமும் பாதுகாப்பு பெற்று கொடுக்கும் முகமாக பாதுகாப்பு கெமரா கட்டமைப்பின் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு நுழைவாயில் கட்டமைப்புடன் கூடிய லிஃப்ட்கள் அமைக்கப்படுவதனால் பிற நபர்கள் வெளியில் இருந்து உள்ளே வருவதை முற்றாக கட்டுப்படுத்தப்படும். வீட்டுத் தொகுதியின் திறந்த மேல்மாடியில் நீச்சல் குளத்திற்காக ஒதுக்கப்படுவதுடன், குழந்தைகளுக்கான நீச்சல் குளம் ஒன்றும், யோகா பயிற்சி பகுதி, பாபிகியு பகுதி, கடற்கரை கரப்பந்தாட்டப் விளையாட்டு சூழல், சூரிய குளியல் பகுதி மற்றும் தனிப்பட்ட கடற்கரைப் பகுதி. கடற்கரை பதியை அண்டி நிர்மானிக்கப்படும் உணவகம் மற்றும் சாரதிகளுக்கான ஓய்வறையும் Beach Frontஇன் இரண்டாம் கட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளன. இந்த சொகுசு வீட்டுத் தொகுதியில் வீடொன்று 15 மில்லியன் ரூபாவில் இருந்து ஆரம்பமாகுவதுடன் வாடிக்கையாளர்களுக்கு தமது வீட்டை முன்பதிவு செய்துகொள்ள தற்போது சந்தர்ப்பம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரைம் குழும வர்த்தகம் தற்போது நாடு முழுவதிலும் 4000க்கும் அதிகமான காணி திட்டங்களும், 25ற்கும் அதிகமான தனி வீட்டுத் திட்டங்களையும் நிறைவு செய்துள்ளதுடன், 42 Condominium Apartments வேலைத் திட்டங்களை நிர்மானித்துள்ளதுடன் அதில் 36 திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்து வாடிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பிரைம் ரெஸிடென்ஸியின் தாய் நிறுவனமான பிரைம் லான்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பூமியில் சிறந்த இடம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய செயற்பட்டு இன்றுவரை கட்டட மேம்பாட்டு துறையில் முதன்மையான இடத்தை பிடிக்க முடிந்துள்ளது. அத்துடன் இலங்கையில் சேவை செய்யக்கூடிய சிறந்த 25 நிறுவனங்களில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் பிரைம் லான்ட் நிறுவனம் தெரிவாகியதுடன் LMD வணிக இதழிலினால் சிறந்த கௌரவமான நிறுவனங்களின் பட்டியலில் 2016ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக மூன்று தடவை உள்ளடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் இணை பெண் தலைவருக்கு LMD வர்த்தக சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 வர்த்தகங்கள் என்ற ‘Realty Visionary’ and ‘Power Woman’ இனால் கௌரவிக்கப்பட்டதுடன் அபிமானம் பெற்ற PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் Best Developer மற்றும் Best Luxury Condo Development விருதுகளையும் பிரைம் நிறுவனம் பெற்றது. Asian One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றமை குறிப்பிடதத்தக்கது.

Most Viewed