Back to Top

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் துறைசார் அதிகாரிகளுக்கு முதல் முறையாக NVQ திறன் உரிமம் வழங்கப்படுகிறது

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் துறைசார் அதிகாரிகளுக்கு முதல் முறையாக NVQ திறன் உரிமம் வழங்கப்படுகிறது

August 1, 2020  11:23 am

Bookmark and Share
தலவாக்கலை தோட்ட நிறுவனம் (TTEL), களனிவெலி பிளான்டேஷன்ஸ் (KVPL) மற்றும் ஹொரன தோட்ட நிறுவனம் (HPL) ஆகிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் துறைசார் அதிகாரிகள் 100 பேருக்கு இலங்கையில் முதன் முறையாக பெருந்தோட்ட துறை தொடர்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய திறன் உரிமைப் பத்திரம் (NSP) நிகழ்ச்சி மற்றும் தேசிய தொழில் தகைமை (NVQ) தொடர்பிலான தேர்வின் பின்னர் ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவன மனித வள அபிவிருத்தி தொடர்பான புதிய மைல்கல்லொன்று எட்டப்பட்டுள்ளது.

தேசிய திறன் உரிமைப் பத்திர (NSP) முறை என்;ற பொருளாதார பல்வேறு துறையின் ஊடாக உரிமைப் பத்திரமுடையோருக்கு அவர்களது திறன், நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை ஒன்றுதிரட்டி தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கான நோக்கமே விரிவான நe- documentation வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

தேசிய திறன் உரிமைப் பத்திர எனும் தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபையின் (NAITA) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இலங்கை சேவை சம்மேளம் (EFC), சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கொழும்பு அலுவலகம் மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழில்முறை கல்வி ஆணையம் (TVEC) ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட முக்கோண முயற்சியாகும். அது திறன் அபிவிருத்தி, வேலை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் வழிநடத்தல்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

NAITA வின் மதிப்பீட்டாளர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி மதிப்பீடுகளை பூர்த்தி செய்த துறைசார் அதிகாரிகள் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான விசேட வைபவத்தின் போது கௌரவிக்கப்பட்டனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் திறன் மேம்பாட்டு, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பிரதிநித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் தனியார் பிரிவு நிறுவனங்களின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திறன் மேம்பாடு தொழில்நுட்பத்துடன் சேரும்போது எமக்கு பிரபலமான புதிய வாய்ப்புக்களை உருவாக்க முடியும். எமது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் சர்வதேச கௌரவத்திற்கு உட்பட்ட நிறுவனமாகவும், டிஜிட்டல் மயமாக்கலில் பலம்வாய்ந்த தொழில் சக்தியுடன் இணைவதற்கு எமது ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் ஒட்டுமொத்தமாக தேசிய பொருளாதாரத்தில் மற்றும் பெருந்தோட்டத் துறையில் நீண்டகால சவால்களை தீர்ப்பதற்காக புதிய தீர்வுகளை கண்டுபிடிக்க உதவியளிக்கும் முதலாவது நிறுவனமாகியமையை இட்டு ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனம் பெருமையடைகிறது என ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், கலாநிதி ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.

இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைசார் அதிகாரிகளுக்கு குறைந்த பட்சம் துறையில் ஒருவருடமாவது அனுபவம் இருக்க வேண்டியது அவசியம் என்பதுடன், அடிப்படை மற்றும் இறுதியான மதிப்பீட்டு சுற்றுக்களில் கோட்பாட்டு மற்றும் நடைமுறையான இரு பிரிவுகளுக்காக தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி அதிகார சபையினால் (NAITA) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த உறுப்பினருக்கு அவர்களது திறன்கள் online ஊடாக இலகுவாக தேடுவதற்கு இலகுவான விதத்தில் QR குறியீடுடன் SMART கார்ட் அட்டையாக டிஜிட்டன் திறன் உரிமைப் பத்திரம் வெளியிடப்படுகிறது. 'ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் புத்தாக்கம், விசேட பயிற்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலுள்ள பல்வேறு தளங்களினால் கௌரவத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது. NVQ தகைமையுடன் துறைசார் அதிகாரிகளை உருவாக்கி நாம் மேலுமொரு மைல்கல்லை அடைய இந்த NVQ தகைமை அவர்களுக்கு எந்தவொரு இடத்திலும் தொழில் செய்வற்கு சக்தியாக அமையும்.' என களனிவெளி பிளான்டேஷன்ஸின் மனித வள மற்றும் நிறுவன ரீதியான நிலைத்தன்மை தொடர்பான பொது முகாமையாளர் அநுருத்த கமகே தெரிவித்துள்ளார்.

இந்த தேசிய திறன் உரிமைப் பத்திரம் online தளத்தில் ஊழியர்கள், முதலாளிகள், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில் சந்தை இடைத் தரகர்களுடன் இணைப்பதுடன் ஊழியரின் அறிவு, திறன் மற்றும் சிந்ததைக்குரிய இணையத்தள நிகழ்ச்சி (The Virtual document) குறிப்பிடப்படுகின்றது. மேலும் ஊழியர்களது பல்வேறு திறன்களை மதிப்பீடு செய்கையில் மற்றும் அவர்களை ஈடுபடுத்துதல் மற்றும் அனுபவங்களுடன் கூடிய திறன்கள் மற்றும் தகுதிகள் தொடர்பாக விரிவான புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தேசிய திறன் உரிமைப் பத்திரமுடையோருக்கு இதனூடாக தகுதியான தொழிலை தேடிக்கொள்வதற்கும் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியான புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளும் முறையின் கீழ் வேறு தொழிலை மேற்கொள்ளுதல் அல்லது மாற்று தொழில் ஒன்றை செய்வதற்கு ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த NSPஇன் மேலதிக நன்மையாக அமைவது Recognition of Prior Learning தளத்திற்கு நேரடியாக இணைவதுடன் சரியாக மதிப்பீடு செய்தல் மற்றும் உறுதிப்படுத்துவதன் மூலம் பொதுவான விதத்தில் பெற்றுக் கொண்ட அறிவு, திறன் மற்றும் தகுதி ஆகியவற்றை புரிந்துகொள்வதற்கு அது உதவியாக அமையும். RPL முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது NSP ஊழியர்களின் தொழில் வழிகாட்டியாக அமையும். மேலும், அதனை அவர்களுக்கு எதிர்காலத்திற்கான வழியைத் திறந்து அவர்களின் திறன்கள் குறித்து அத்தாட்சியளிப்பதற்கும் ஒரு ஆரம்பமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

1878ஆம் ஆண்டு வாஸ் பீ. ஹேலிஸினால் காலி நகரத்தை மையமாகக் கொண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஹேலிஸ் நிறுவனம் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுடன் 140 வருடத்துக்கு மேலான சேவையை வழங்கி வருவதோடு, ஹேலீஸ் குழுமம் நிலையான புத்தாக்கத்துடன் உலகை சிறப்பாக எதிர்கொண்டு உலகின் 5 வலயங்களில் 16 பிரிவுகளில் தடம்பதித்துள்ள பல்நோக்கு நிறுவனமாகும். நிகழ்காலத்தில் இலங்கை வியாபார துறையில் முன்னணி இடத்தை பெற்றுள்ள நிறுவனம் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்ற முதலாவது நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 3.3% பங்களிப்பை ஹேலீஸ் நிறுவனமே வழங்குகின்றது.

Most Viewed